கொல்கத்தா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இறுதிப்போட்டி வரை செல்வதற்கு முக்கிய வீரராக வலம் வந்த முகமது ஷமி, 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரது பந்து வீச்சை நாடே கொண்டாடிக் கொண்டு இருக்கக் கூடிய நேரத்தில், அவரின் முன்னாள் மனைவியான ஹசின் ஜஹான் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். நடிகை ஜஹான், கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூரில் உள்ள ஒரு பிளாட்டில் தனது மகளுடன் தங்கி வருகிறார். இந்நிலையில், ஷமிவுடனான ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இது குறித்து ஜஹான் கூறுகையில், “என்னுடன் தற்போது யாரும் இல்லை. நானும், என்னுடைய மகளும்தான் வசித்து வருகிறோம். ஷமியுடன் விவாகரத்து வழக்கில் நான் தனியாகத்தான் போராடி வருகிறோன். என் பெற்றோர் 250 கிமீ தொலைவில் உள்ளார்கள். அவர்களும் நோய்வாய்ப்பட்டுள்ளனர். எனது தம்பி கரோனா நோயால் இறந்து விட்டார்.
இந்த வழக்குகள் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. ஷமிக்கு ஆதரவாக ஊடகங்கள் செயல்படுகின்றன. என்னுடை தரப்பு என்னவென்று கேட்காமல், அவர் அப்பாவியாகவும், என்னை வில்லியாகவும் காண்பித்தார்கள். டிஆர்பிக்காக நான் வில்லனாக்கப்பட்டாலும், நான் எவ்வளவு சகித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஷமி ஒரு அருவறுக்கத்தக்க மனிதர் என்று எனக்குத் தெரியும். மீண்டும் அவருடைய வலையில் நான் விழமாட்டேன். நீதிமன்றத்தின் அழுத்தத்திற்கு உட்படாமல் ஷமி திருந்த மாட்டார். அவர் செய்த தவறுகளுக்கு நிச்சயம் கடவுளால் தண்டிக்கப்படுவார். அந்த நாளுக்காக நான் காத்திருப்பேன்" என்று தெரிவித்தார்.
அண்மையில் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தது குறித்து, அவரது மனைவியிடம் ஊடகங்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அவர் அணிக்கு சிறந்த வீரராக இருப்பது போன்று நல்ல மனிதராகவும் இருந்திருந்தால், நாங்கள் நல்ல வாழ்க்கையை நடத்தியிருக்கலாம்.
அவர் நல்ல மனிதராக இருந்திருந்தால் என் மகளும், எனது கணவரும், நானும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தியிருக்கலாம். மேலும், அவர் ஒரு நல்ல வீரராக மட்டுமல்லாமல் நல்ல கணவராகவும், நல்ல தந்தையாகவும் இருந்தால், அது மரியாதைக்குரிய விஷயமாக இருந்திருக்கும்” என அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகக் கோப்பையின் மீது கால் வைத்து போஸ் கொடுத்த விவகாரம்.. மிட்செல் மார்ஷ் மீது வழக்குப்பதிவு!