மும்பை: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஒயிட்-பால் கேப்டன் கீரன் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஏப்.20) அறிவித்தார். அவருக்கு வயது 34. இதுகுறித்து அவர், "அனைவருக்கும் வணக்கம், நீண்ட ஆலோசனைக்கு பிறகு, நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.
நான் 10 வயது சிறுவனாக இருந்தபோது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன். ஏனென்றால், மேற்கிந்திய தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன்" எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொல்லார்டு, 2007ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
மொத்தம் 123 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,706 ரன்களை மூன்று சதங்களுடன் குவித்தார். அத்துடன் 55 விக்கெட்டுகளை எடுத்தார். அதேபோல 101 டி20 போட்டிகளில், 1,569 ரன்களை எடுத்தார். டேவிட் மில்லருக்கு அடுத்து அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமை பொல்லார்டுக்கு உண்டு. மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான பிறகு இவருக்கு இந்தியாவில் ரசிகர் பட்டாளம் குவிந்தது. அதை மனதில் வைத்தே தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IPL 2022: 10 ஓவரில் ஆட்டத்தை முடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ்!