ETV Bharat / sports

Lasith Malinga : மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்கா நியமனம்! - IPL Cricket Lasith Malinga Mumbai Bowling Coach

Lasith Malinga appoints Mumbai Indians Bowling Coach : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை வீரர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டு உள்ளார்.

Lasith Malinga
Lasith Malinga
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 5:56 PM IST

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டு உள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கைக்கு எப்படியோ, அதேபோல் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல நெருக்கடியான தருணங்களில் போட்டியை வென்று கொடுத்து உள்ளார். ஐபிஎல்லில் 13 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓர் அங்கமாக இடம் பிடித்து இருந்தார்.

இதில் 11 வருடங்கள் வீரராக மலிங்கா இடம் பெற்று இருந்தார். ஒரு வருடம் பந்துவீச்சு பிரிவுக்கு வழிகாட்டியாக செயல்பட்டார். அவரது வழிகாட்டுதலில், நான்கு முறை ஐபிஎல் கோப்பையையும், இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும், ஒரு மேஜர் லீக் கோப்பை என மொத்தம் 7 கோப்பைகளை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

மேஜர் லீக் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்தமான MI நியூயார்க் மற்றும் MI கேப்டவுன் அணிகளுக்கு பிரதான பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்கா செயல்பட்டு உள்ளார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் மூன்று அணிகளுக்கும் பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்கா உருவெடுத்து உள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையைக் கொண்ட மலிங்கா, 2021ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனிடையே மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த ஷேன் பாண்ட் அண்மையில் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்கா இணைந்து உள்ளார். இதன் மூலம் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓர் அங்கமாக மலிங்கா உருவெடுத்து உள்ளார். மார்க் பவுச்சர் மற்றும் கீரன் பொல்லார்ட் ஆகியோர் அடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குழுவில் மலிங்காவும் இணைய உள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து பேசிய மலிங்கா, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை பெருமையாக கருதுவதாகவும், மார்க் பவுச்சர், பொல்லார்ட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அடங்கிய கூட்டணியுடன், குறிப்பாக இளம் வீரர்கள் அதிகம் உள்ள மும்பை அணியில் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாகவும்" தெரிவித்தார்.

இதையும் படிங்க : வான்கடே மைதானத்தில் சச்சின் தெண்டுல்கர் சிலை திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.