வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல் ராகுலுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால் , அவர் இந்திய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் புறப்படும் போது உடன் செல்லவில்லை.
தவான் தலைமையிலான இந்திய அணி தற்போது , வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் விளையாடி வரும் நிலையில் , வரும் 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை 5 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த நிலையில் கே.எல் ராகுல் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டாலும் , அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி 20 தொடரில் பங்கேற்க போவதில்லை என கூறப்படுகிறது. அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் , அவரை மேலும் ஒருவாரம் ஓய்வெடுக்க பிசிசிஐயில் உள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் டி-20 தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. அதனால் இஷான் கிஷன் அல்லது ரிஷப் பந்த் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பினை பெற உள்ளனர்.
இதையும் படிங்க: 'சென்னை மாரத்தான்' போட்டியின் தேதி அறிவிப்பு!