ETV Bharat / sports

ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ஜேசன் ராய் விலகல் - குஜராத் அணி வீரர் ஜேசன் ராய் விலகல்

ஐபிஎல் 2022 சீசனில் புதிதாக இணைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஜேசன் ராய் விலகினார்.

Jason Roy pulls out of IPL citing bubble fatigue

author img

By

Published : Mar 1, 2022, 10:55 AM IST

ஹைதாராபாத்: ஐபிஎல் 2022 சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி முடிகிறது. மொத்தம் 70 லீக் போட்டிகள் மும்பை, புனேவில் உள்ள சர்வதேச தர மைதானங்களில் நடக்கிறது. குரூப் ஏவில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும், குரூப் பியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

அண்மையில், ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஜேசன் ராய் குஜராத் டைட்டன்ஸ் அணியால், ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் அணியிலிருந்து விலகி உள்ளார். தொடர்ந்து பயோ - பபுள் பாதுகாப்பில் இருப்பதால் சோர்வு, குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை போன்ற காரணத்தால் ஜேசன் விலகியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.