டப்ளின் (அயர்லாந்து): ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட அயர்லாந்து சென்றுள்ளது. முன்னாள் இந்திய வீரர் லட்சுமணன் இந்த அணிக்கு பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி டப்ளின் நகரின் மலாஹிட் மைதானத்தில் நேற்று (ஜுன் 26) நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், மழை குறுக்கிட்டது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, தொடர் மழையினால் இரவு 11 மணியளவில் தொடங்கியது.
4 ஓவர் பவர்பிளே: ஆட்டம் 12 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. பவர்பிளே நான்கு ஓவர்கள் எனவும், அதிகபட்சமாக இரண்டு பந்துவீச்சாளர்கள் மூன்று ஓவர்களை வீசிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பால் ஸ்டெர்லிங், கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கினர்.
இதில், புவனேஷ்வர் குமாரின் முதல் ஓவரிலேயே கேப்டன் ஆண்ட்ரூ டக்-அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து, அதிரடி வீரர் பால் ஸ்டெர்லிங் 4 (5) ரன்களுக்கும், கரேத் டெலானி 8 (9) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
-
Innings Break!
— BCCI (@BCCI) June 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Ireland post a total of 108/4 in 12 overs.#TeamIndia chase coming up shortly.
Scorecard - https://t.co/V1IMXtpJ9X #IREvIND pic.twitter.com/9HfjyFGiCY
">Innings Break!
— BCCI (@BCCI) June 26, 2022
Ireland post a total of 108/4 in 12 overs.#TeamIndia chase coming up shortly.
Scorecard - https://t.co/V1IMXtpJ9X #IREvIND pic.twitter.com/9HfjyFGiCYInnings Break!
— BCCI (@BCCI) June 26, 2022
Ireland post a total of 108/4 in 12 overs.#TeamIndia chase coming up shortly.
Scorecard - https://t.co/V1IMXtpJ9X #IREvIND pic.twitter.com/9HfjyFGiCY
50 ரன்கள் பார்ட்னர்ஷிப்: ஹாரி டெக்டர் - டக்கர் ஜோடி நிலைத்து நின்று ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், டக்கர் 18 (16) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து, டெக்டர் ரன்களை குவிக்க அயர்லாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக டெக்டர், 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 64 (33) ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சு தரப்பில் புவனேஷ்வர், ஹர்திக் பாண்டியா, ஆவேஷ் கான், சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
ருதுராஜுக்கு காயமா?: 72 பந்துகளுக்கு 109 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணியின் ஓப்பனர்கள் இஷான் கிஷன், தீபக் ஹூடா ஆகியோர் களமிறங்கினர். ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பீல்டிங்கின்போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் பேட்டிங் செய்ய வர இயலவில்லை என கூறப்படுகிறது. எனவே, தீபக் ஹூடா ஓப்பனராக இறங்கினார்.
ஆரம்பத்தில் இருந்தே அதிரடியை காட்டிய இஷான் 11 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்தில் சூர்யகுமார் எல்பிடபிள்யூ முறையில் டக்-அவுட்டாகி வெளியேற, கேப்டன் ஹர்திக் களத்திற்கு வந்தார்.
-
.@HoodaOnFire was the pick of the #TeamIndia batters and was our top performer from the second innings 💥#IREvIND pic.twitter.com/jsZsjxbTZ5
— BCCI (@BCCI) June 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@HoodaOnFire was the pick of the #TeamIndia batters and was our top performer from the second innings 💥#IREvIND pic.twitter.com/jsZsjxbTZ5
— BCCI (@BCCI) June 26, 2022.@HoodaOnFire was the pick of the #TeamIndia batters and was our top performer from the second innings 💥#IREvIND pic.twitter.com/jsZsjxbTZ5
— BCCI (@BCCI) June 26, 2022
ஹூடாவுடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் வேகமாக ரன்களை குவிக்க தொடங்கினார். ஹூடாவும் பவுண்டரிகளை பறக்கவிட ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடி 64 ரன்களை சேர்த்த நிலையில், ஹர்திக் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 24 (12) ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
சஹால் ஆட்டநாயகன்: தொடர்ந்து, பவுண்டரிகளை குவித்த ஹூடா 10ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன்மூலம், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
-
For his economical spell of 1/11 - @yuzi_chahal was the player of the match in the 1st T20I 👏👏
— BCCI (@BCCI) June 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
A 7-wicket win for #TeamIndia to start off the 2-match T20I series against Ireland 🔝#IREvIND pic.twitter.com/eMIMjR9mTL
">For his economical spell of 1/11 - @yuzi_chahal was the player of the match in the 1st T20I 👏👏
— BCCI (@BCCI) June 26, 2022
A 7-wicket win for #TeamIndia to start off the 2-match T20I series against Ireland 🔝#IREvIND pic.twitter.com/eMIMjR9mTLFor his economical spell of 1/11 - @yuzi_chahal was the player of the match in the 1st T20I 👏👏
— BCCI (@BCCI) June 26, 2022
A 7-wicket win for #TeamIndia to start off the 2-match T20I series against Ireland 🔝#IREvIND pic.twitter.com/eMIMjR9mTL
ஹூடா 47 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 5 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 ஓவர்கள் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 11 ரன்களை மட்டும் கொடுத்த சஹால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது டி20 போட்டி இதே மலாஹிட் மைதானத்தில் நாளை (ஜூன் 28) நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: அச்சச்சோ!... கேப்டனுக்கு கரோனாவா...