ETV Bharat / sports

RR vs LSG: ஆதிக்கத்தை தொடருமா ராஜஸ்தான்? லக்னோ அணியின் வியூகம் என்ன? - ஐபிஎல் 26வது லீக் ஆட்டம்

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி ஆதிக்கத்தைத் தொடருமா? வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

IPL today match
ஐபிஎல் இன்றைய ஆட்டம்
author img

By

Published : Apr 19, 2023, 3:00 PM IST

ஹைதராபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று (ஏப்ரல் 19) பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சீசனில் 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி, 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேநேரம், 5 போட்டிகளில் பங்கேற்றுள்ள லக்னோ அணி, 3 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற இரு அணிகளும் போராடும்.

லக்னோ அணியைப் பொறுத்தவரை கேப்டன் கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா, நிகோலஸ் பூரன், ஸ்டொய்னிஸ் என பேட்டிங் வலுவான நிலையில் உள்ளது. குறிப்பாக நடப்பு சீசனில் பூரன் 141 ரன்களைக் குவித்துள்ளார். தொடக்க வீரர்கள் சரியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தால், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் கூடுதல் ரன்கள் சேர்க்க உதவியாக இருக்கும். கடந்த ஆட்டத்தில் லக்னோ அணி, பஞ்சாபிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால் இன்றைய ஆட்டத்தில் கூடுதல் கவனமுடன் விளையாட வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்த, லக்னோ அணி பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளதாகத் தெரிகிறது.

டிகாக்கிற்கு வாய்ப்பு?: லக்னோ அணியில் இதுவரை தென்னாப்பிரிக்கா விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் களம் இறக்கப்படவில்லை. அதனால், இன்றைய ஆட்டத்தில் கைல் மேயர்ஸூக்கு பதிலாக டிகாக் களம் இறக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தவரை ரவி பீஷ்னோய், ஆவேஷ் கான், படோனி, மார்க்வுட் நம்பிக்கை அளிக்கின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் பலமாகவே உள்ளது. குஜராத் அணியுடன் நடைபெற்ற கடந்த ஆட்டத்தில், அந்த அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் (1), பட்லர் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், இருவரையும் குறைத்து மதிப்பிட முடியாது. கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். கடந்த போட்டியில் 32 பந்துகளில் 60 ரன்களைக் குவித்தார். நடுவரிசையில் ஹேட்மேயர் நம்பிக்கை அளிக்கிறார்.

மூவர் கூட்டணி: பந்துவீச்சைப் பொறுத்தவரை டிரென்ட் போல்ட், அஸ்வின், சாஹல் ஆகியோர் எதிரணியை மிரட்டி வருகின்றனர். மூவரும் முழுத் திறனை வெளிப்படுத்தி பந்து வீசினால், லக்னோ அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் நெருக்கடி கொடுக்கலாம். சந்தீப் சர்மா, ஆடம் ஸம்பாவும் சிறந்த பங்களிப்பை அளிக்கின்றனர். இதனால், ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைக்க போராடும் என்பதை மறுக்க முடியாது. மேலும், அந்த அணி சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.

போட்டி எங்கே?: ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிரான போட்டி, ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சீசனில், முதல் போட்டி இந்த மைதானத்தில் இன்று நடக்கிறது. இதற்கு முன் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய டி20 போட்டி இங்கு நடைபெற்றது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.

நேருக்கு நேர்: ஐபிஎல் தொடரில் இதுவரை லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் 2 போட்டிகளில் மோதியுள்ளன. 2 ஆட்டங்களிலும் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோ உத்தேச அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா, நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஸ்டொய்னிஸ், ஆயுஷ் படோனி, கே.கவுதம், ரவி பீஷ்னோய், ஆவேஷ் கான், மார்க்வுட்.

ராஜஸ்தான் உத்தேச அணி: ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரியான் பராக், ஹெட்மேயர், துருவ் ஜூரெல், அஸ்வின், ஆடம் ஸம்பா, போல்ட், சாஹல்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.