ETV Bharat / sports

காணுங்கள் : சச்சின் என்னும் ஆதர்சத்திற்கு வயது 48

இந்தியக் கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று (ஏப். 24) தனது 48ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். உலகம் முழுவதும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சச்சின் டெண்டுல்கர், Sachin Tendulkar Birthday News
காணுங்கள் : சச்சின் எனும் ஆதர்சத்திற்கு வயது 48
author img

By

Published : Apr 24, 2021, 7:44 PM IST

1973ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த சச்சின் டெண்டுல்கர், தனது பதினாறு வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, 2013ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.

தேசிய அளவில் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதினைப் பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின், இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா 2013ஆம் ஆண்டு சச்சினுக்கு வழங்கப்பட்டது.

சச்சின், ஒருநாள் போட்டிகளில் 51 சதங்கள், டெஸ்ட் போட்டிகளில் 49 சதங்கள் என 100 சர்வதேச சதங்களைக் குவித்திருக்கிறார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறை 200 ரன்களை எடுத்தவர், உலக அரங்கில் மொத்தமாக 34,357 ரன்களைக் குவித்தவர் என மிகப்பெரும் சாதனைகளையெல்லாம் தன்வசம் வைத்துள்ளார் சச்சின். இந்தச் சாதனைகளால் மட்டும் சச்சின் இங்கு கொண்டாடப்படவில்லை.

சச்சின் என்னும் ஆதர்சம்

இந்தியா கபில் தேவ், கவாஸ்கர் எனப் பல தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களைப் பெற்றிருக்கிறது. இருந்தும் சச்சின் ஏன் அனைவருக்குமான ஆதர்சமாக இருக்கிறார் என்றால் அவரின் நிதானமும், அவர் எடுத்துக்கொண்ட பணியில் காட்டும் அர்ப்பணிப்பும்தான்.

இன்று அவரின் ஆட்டத்தின் மீது பலரும் விமர்சனங்களை அடுக்கினாலும், இந்தியாவின் ஒவ்வொரு மூளைமுடுக்கிலும் ஒரு சிறுவன் சச்சினைப்போல் கண்சிமிட்டியாவாரே பேட்டிங் செய்வதும், அவுட்டாகி வெளியேறும்போது மட்டையை சச்சினைப்போல் கைகளுக்கு நடுவே வைத்துக்கொண்டு நடப்பதும் சச்சினின் அசைக்க முடியாதா ஆளுமையே காட்டுகிறது.

இதையும் படிங்க: IPL 2021 RR vs KKR: புள்ளிப்பட்டியலில் படியேறப்போவது யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.