ETV Bharat / sports

'எப்போவும் எங்களுக்கு தோனிதான் முக்கியம்' - சிஎஸ்கே சீக்ரெட் - ipl mega auction 2022

ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் சென்னை அணி தக்கவைக்கும் முதல் வீரராக தோனி இருப்பார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

MS Dhoni, தோனி
MS Dhoni
author img

By

Published : Oct 17, 2021, 6:05 PM IST

டெல்லி: ஐபிஎல் டி20 தொடரின் 14ஆவது சீசன் சாம்பியன் பட்டத்தை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. 2010, 2011, 2018ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை அணி இந்தாண்டு நான்காவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

அடுத்து 2022ஆம் ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில், இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்படவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால், அடுத்தாண்டு மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.

தோனியை தக்கவைப்போம்

எனவே, ஒவ்வொரு அணியும் குறிப்பிட்ட வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். மூன்று இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது இரண்டு இந்தியர்கள், இரண்டு வெளிநாட்டினர் என்ற முறையில் தக்கவைத்துள்ளக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வரும் மெகா - ஏலத்தில் சென்னை அணி தக்கவைக்கும் முதல் வீரராக கேப்டன் தோனி இருப்பார் என சென்னை நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Still, I haven't left behind...

சென்னை நிர்வாகி அணி, "எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என்பது குறித்து இன்னும் எங்களுக்குத் தெளிவு ஏற்படவில்லை. இருப்பினும், பிற விஷயங்களை விட எங்கள் அணிக்கு கேப்டன் தோனிதான் முக்கியம். எனவே, நாங்கள் முதலாவதாக தக்கவைக்கும் வீரராக தோனி இருப்பார்" எனக் கூறியுள்ளார்.

இதனால், தோனி அடுத்தாண்டு நிச்சயம் சென்னை அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நேற்று முன்தினம் (அக். 15) நடைபெற்ற இறுதிப்போட்டிக்குப் பிறகு,

தோனியிடம் அடுத்தாண்டு சென்னை அணிக்காக விளையாடிவீர்களா எனக் கேட்கப்பட்டது. அதற்கு, நான் விளையாடுவது பிசிசிஐ-யின் கையில் தான் இருக்கிறது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நான் இன்னும் விட்டுப்போகவில்லையே - அடுத்த சீசன் குறித்து தோனி சூசகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.