ETV Bharat / sports

IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

ஐபிஎல் தொடரின் முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்
author img

By

Published : Mar 31, 2023, 7:24 PM IST

Updated : Mar 31, 2023, 9:27 PM IST

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் டாடா ஐபிஎல் 2023 சீசன் கோலாகலமாக இன்று (மார்ச் 31) தொடங்கியது. முதல் ஆட்டத்தில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

முதலில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டர்கள் களமிறங்கி உள்ளனர். இரு அணிகளின் பிளேயிங் லெவன் பின்வருமாறு.

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (கேப்டன்/கீப்பர்), சிவம் துபே, தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்:விருத்திமான் சாஹா (கீப்பர்), சுப்மான் கில், கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோசுவா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்.

இந்த பிளேயிங் லெவனில் சென்னை அணியில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மற்றும் குஜராத் அணியில் ஜோசுவா லிட்டில் இருவரும் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குகின்றனர். நாளை 2 போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசொசியேசன் ஸ்டேடியத்தில் பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது போட்டி லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதையும் படிங்க: TATA IPL 2023: எந்த தேதியில், எந்த அணி களம் காணும்.. முழு அட்டவணை..

Last Updated : Mar 31, 2023, 9:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.