செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் டி20 தொடர் தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புதிய லுக் ஒன்று வெளியாகி இணையதளத்தை கலக்கிவருகிறது.
இந்த லுக்கை ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "எம்.எஸ் தோனி இதுவரை செய்யாத ஒன்றை ஐபிஎல் தொடருக்கு முன்னதாக செய்யவுள்ளார்.
உண்மையான படம் இனிதான் வரப்போகுது" என கூறி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
இந்த புகைப்படத்தை தோனியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்வத்துடன் பகிர்ந்து கமெண்டுகளை எழுதி குவித்துவருகின்றனர். குறிப்பாக தோனியின் புதிய ஹேர்ஸ்டைல் குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் விவாதித்துவருகின்றனர்.
-
#MSDhoni's up to something new before #VIVOIPL! 🧐
— Star Sports (@StarSportsIndia) August 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Stay tuned for the Asli Picture!#AsliPictureAbhiBaakiHai pic.twitter.com/4w51ynIrs0
">#MSDhoni's up to something new before #VIVOIPL! 🧐
— Star Sports (@StarSportsIndia) August 19, 2021
Stay tuned for the Asli Picture!#AsliPictureAbhiBaakiHai pic.twitter.com/4w51ynIrs0#MSDhoni's up to something new before #VIVOIPL! 🧐
— Star Sports (@StarSportsIndia) August 19, 2021
Stay tuned for the Asli Picture!#AsliPictureAbhiBaakiHai pic.twitter.com/4w51ynIrs0
ஐபிஎல் தொடர் தொடர்பான சுவாரசியமான விளம்பர படத்தில் தோனி நடிக்கவுள்ளதாகவும், அதைத்தான் இவ்வாறு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சூசகமாகத் தெரிவித்துள்ளது எனக் கூறப்படுகிறது.
கோவிட்-19 காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: பிரதமர் வடிவில் தந்தையைப் பார்த்தேன்- பவானி தேவி!