ETV Bharat / sports

GT vs LSG: சாஹா, கில் அதிரடி...சரவெடி - குஜராத் அணி அபார வெற்றி! - குஜராத் லக்னோ அணிகள் மோதல்

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

ipl
ஐபிஎல்
author img

By

Published : May 7, 2023, 8:40 PM IST

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் க்ருணல் பாண்ட்யா, பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாஹா, சுப்மன் கில் களம் இறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் லக்னோ பந்துவீச்சாளர்கள் விழிபிதுங்கினர். 81 ரன்கள் எடுத்திருந்த போது ஆவேஷ் கான் பந்துவீச்சில் சாஹா ஆட்டமிழந்தார். 43 பந்துகளில் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 25 ரன்களில் வெளியேறினார். எனினும் மறுமுனையில் சுப்மன் கில் அதிரடியை தொடர்ந்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை குவித்தது.

சுப்மன் கில் 51 பந்துகளில் 94 ரன்களுடனும் (2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள்), டேவிட் மில்லர் 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். லக்னோ அணியில் மொஹ்சின் கான், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் 228 ரன் இமாலய இலக்குடன் லக்னோ அணி களம் இறங்கியது. கைல் மேயர்ஸ், குயின்டான் டி காக் நல்ல தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது. 48 ரன்கள் எடுத்திருந்த போது மேயர்ஸ் ஆட்டமிழந்தார். ஆனால் பின்னால் களம் இறங்கிய வீரர்கள், குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தீபக் ஹூடா 11, ஸ்டொய்னிஸ் 4, பூரன் 3, படோனி 21 ரன்களில் வெளியேறினர். கேப்டன் க்ருணல் பாண்ட்யா டக் அவுட்டாகி ஏமாற்றினார். குயின்டான் டி காக் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 16 புள்ளிகளை பெற்றுள்ள அந்த அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

குஜராத் அணியின் பந்துவீச்சில் அதிகபட்சமாக மொகித் சர்மா 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஷமி, ரஷீத் கான், நூர் அகமது தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். சுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.