ETV Bharat / sports

கரோனா நிவாரண நிதி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ 7.5 கோடி அறிவிப்பு! - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கரோனா நிதியுதவி

நியூடெல்லி: கரோனா தொற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ 7.5 கோடியை நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

RR
RR
author img

By

Published : Apr 29, 2021, 8:25 PM IST

நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாகப் பரவிவருகிறது. கடந்த 24மணி நேரத்தில் 3.79 லட்சம் மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கரோனா பாதிப்புக்கு உதவும் நோக்கில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ 7.5 கோடி (10 லட்சம் அமெரிக்க டாலர்கள்) நிவாரண நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அறக்கட்டளையான ராயல் ராஜஸ்தான் அறக்கட்டளை - பிரிட்டன் ஏசியன் அறக்கட்டளை இணைந்து இந்த நிதியுதிவியை அறிவித்துள்ளன.

இதுகுறித்து ராஜஸ்தான் ராய்ல் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவும் நோக்கில் ரூ.7.5 கோடியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது பங்களிப்பாக வழங்குகிறது.

  • Rajasthan Royals announce a contribution of over $1 milion from their owners, players and management to help with immediate support to those impacted by COVID-19. This will be implemented through @RoyalRajasthanF and @britishasiantst.

    Complete details 👇#RoyalsFamily

    — Rajasthan Royals (@rajasthanroyals) April 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

வீரர்கள், அணி நிர்வாகிகள், அணி மேலாண்மை நிர்வாகிகள் முன்வந்து நிதியுதவி அளித்துள்ளார்கள். பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட்டுடன் இணைந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அறக்கட்டளை இந்த நிதியுதவியை வழங்குகிறது.

கரோனா பாதிப்பில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு உதவும் நோக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அறக்கட்டளையின் தலைவர் ரஞ்சித் பரத் தாக்கூர் தலைமையில், இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் பாட் கம்மின்ஸ் ரூ.29 லட்சம், ஆஸ்திரேலியே முன்னாள் வீரர் பிரட்லீ ஆகியோர் பிஎம் கேர்ஸுக்கு நிதியுதவி வழங்கினர். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கரோனா தடுப்பு நிவாரண நிதியை வழங்கும் முதல் ஐபிஎல் அணி என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.