மும்பை: ஐபிஎல் தொடரின் 34ஆவது ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதின. முதலில் பேட்டிங் செயத் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது.
அந்த வகையில் 223 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு, டெல்லி அணி வீரர்கள் களமிறங்கினர். இறுதி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்திலிருந்த ரோவ்மன் பவல் 3 பந்துகளுக்கு 3 சிக்ஸர்களை அடித்து அசத்தினார்.
ஆனால், மூன்றாவது பந்து இடுப்பு உயரம் வீசப்பட்டதாகவும் நோ பால் என்றும் கூறி அம்பயரிடம் ரோவ்மன் பவல், குல்தீப் யாதவ் இருவரும் வாதிட்டனர். இருப்பினும் அம்பயர் நோ பால் கொடுக்கவில்லை. இதனால் கேப்டன் ரிஷப் பந்த், ஷர்துல் தாகூர் இருவரும் களத்தில் இருந்த 2 வீரர்களையும் வெளியேறுமாறு அழைத்தனர்.
இதனிடையே டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் பிரவீன் ஆம்ப்ரே நடுவரிடம் சென்று முறையிட்டார். இறுதியாக முடிவு டிவி நடுவரிடம் சென்று நோபால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதயடுத்து டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்துக்கு 100 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஷர்துல் தாகூருக்கு 50 விழுக்காடு அபராதமும், உதவி பயிற்சியாளர் பிரவீன் ஆம்ப்ரேவுக்கு 100 விழுக்காடு அபராதமும் ஒரு போட்டிக்கும் தடையும் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டம் பெங்களூரு vs ஹைதராபாத்