ETV Bharat / sports

MI vs GT: சிஎஸ்கே உடன் பைனலில் மோதப்போவது யார்? - மும்பை - குஜராத் அணிகள் பலப்பரீட்சை! - 2வது தகுதிச்சுற்று ஆட்டம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ளும். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இன்றைய ஆட்டம், ஐபிஎல் களத்தை அதிர வைத்துள்ளது.

ipl
ஐபிஎல்
author img

By

Published : May 26, 2023, 1:53 PM IST

அகமதாபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், சென்னை, குஜராத், மும்பை, லக்னோ ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்திய சென்னை அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணியை எதிர்கொண்ட லக்னோ அணி தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று (மே 26) நடைபெறுகிறது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வரிந்து கட்டுகின்றன. நடப்பு சீசனில் 14 போட்டிகளில் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகளை பெற்றுள்ள குஜராத் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அந்த அணியின் நிகர ரன் ரேட் 0.809 ஆகும்.

கைகொடுக்குமா பேட்டிங் ஆர்டர்?: குஜராத் அணியை பொறுத்தவரை வலிமையான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். நடப்பு சீசனில் அவர் 722 ரன்களுடன், அதிகமாக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். 730 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கும் பெங்களூரு அணி வீரர் டு பிளெஸ்ஸிசை பின்னுக்குத்தள்ள கில்லுக்கு இன்னும் 9 ரன்கள் மட்டுமே தேவை.

சென்னை அணிக்கு எதிரான முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சுப்மன் கில்லை தவிர பிற வீரர்கள் சோபிக்கவில்லை. அந்த தவறை இந்த போட்டியில் திருத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். ரஷித் கான் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலிக்கிறார். நேர்த்தியான பந்துவீச்சில் அசத்தும் அவர், அதிரடியாக விளையாடி ரன் குவிப்பிலும் ஈடுபடுவது குஜராத் அணிக்கு கூடுதல் பிளஸ்.

பந்துவீச்சில் முகமது ஷமி, ரஷித் கான், மொகித் சர்மா பலம் சேர்க்கின்றனர். சென்னை அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் யஷ் தயாளுக்கு பதிலாக நல்கண்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் சொதப்பியதால், இன்றைய ஆட்டத்தில் யஷ் தயாளுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படலாம். ஜோஸ் லிட்டிலையும் ஆடும் லெவனில் களம் இறக்க முயற்சிக்கலாம். அத்துடன் சொந்த மண்ணில் களம் இறங்குவது குஜராத் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் கோப்பையை வென்ற குஜராத், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற போராடும்.

Gujrat vs Mumbai
குஜராத் vs மும்பை

முன்னேறுமா மும்பை?: நடப்பு சீசனில் மும்பை அணியை பொறுத்தவரை 14 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகளை (நிகர ரன் ரேட் -0.044) பெற்றுள்ளது. எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் களம் இறங்குகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், கேப்டன் ரோஹித் சர்மா நல்ல தொடக்கம் அமைத்து தருவது அவசியம். மிடில் ஆர்டரில் கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா பலம் சேர்க்கின்றனர். டிம் டேவிட், நேஹல் வதேரா தங்கள் பங்களிப்பை கொடுக்கின்றனர்.

பந்துவீச்சில் ஆகாஷ் மத்வால் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். கடந்த ஆட்டத்தில் 5 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை அள்ளினார். பெஹ்ரென்டார்ஃப், ஜோர்டன், க்ரீன் ஃபார்மில் உள்ளனர். சுழலில் அனுபவ வீரர் பியூஷ் சாவ்லா கைகொடுக்கிறார். குஜராத் அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேற மும்பை அணியும் தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதுவரை எப்படி?: ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் இதுவரை 3 முறை மோதியுள்ளன. இதில் குஜராத் ஒரு முறையும், மும்பை 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்டம் எங்கே?: இரு அணிகளும் மோதும் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது.

மும்பை உத்தேச அணி: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஹிருத்திக் ஷோகீன்/நேஹல் வதேரா, ஜோர்டன், பியூஷ் சாவ்லா, பெஹ்ரென்டார்ஃப், ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா

குஜராத் உத்தேச அணி: சுப்மன் கில், சாஹா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், மில்லர், சாய் சுதர்சன்/அபிநவ் மனோகர், ராகுல் திவேட்டியா, ரஷித் கான், நூர் அகமது, ஜோஸ் லிட்டில்/யஷ் தயாள், மொகித் சர்மா, முகமது ஷமி.

இதையும் படிங்க: IPL 2023: வீரர்களை வரம்பு மீறி விமர்சிப்பது சரியா? எல்லை மீறும் ரசிகர்கள்...எதிர்கால கிரிக்கெட்டுக்கு நல்லதா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.