மும்பை: ஐபிஎல் தொடரின் 58ஆவது லீக் ஆட்டம் நேற்றிரவு (மே 11) டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடந்தது. இதில், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி வீரர்கள் பேட்டிங் செய்து, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்தனர்.
அதிகபட்சமாக அஸ்வின் 38 பந்துகளுக்கு 50 ரன்களை எடுத்தார். அடுத்து, படிக்கல் 30 பந்துகளுக்கு 48 ரன்களையும், ஜெய்ஸ்வால் 19 பந்துகளுக்கு 19 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் மிட்செல் மார்ஷ், அன்ரிச் நார்ட்ஜே, சேதன் சக்காரியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அசத்தினர்.
அந்த வகையில், 161 ரன்கள் வெற்றி இலக்குடன் டெல்லி அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க ஆட்டகாரரான பரத் 2 பந்துகளில் விக்கெட்டை இழந்து, அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து களமிறங்கிய டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் கூட்டணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அதன்படி, மார்ஷ் 62 பந்துகளுக்கு 89 ரன்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தார். அதேபோல வார்னர் 41 பந்துகளுக்கு 52 ரன்களை குவித்தார். 18.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்த டெல்லி அணி ராஜஸ்தானை வீழ்த்தியது.
இதையும் படிங்க: ஐபிஎல்: 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி