ETV Bharat / sports

LSG VS RR : ராஜஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் - லக்னோ அபார வெற்றி! - ஐபிஎல் கிரிக்கெட் 2023

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

IPL
IPL
author img

By

Published : Apr 20, 2023, 6:55 AM IST

ஜெய்ப்பூர் : 16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஜெப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்டஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், லக்னோ அணியை விளையாட அழைத்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் கெயில் மேயர்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன் விகிதத்தை உயர்த்தினர். ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அருகே பறக்க விட்ட ராகுல் 1 சிக்சர், 4 பவுண்டரி அடித்து 39 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆயுஷ் பதோனி 1 ரன், தீபக் ஹூடா 2 ரன் என அடுத்தடுத்து அவுட்டாகி வந்த வேகத்தில் நடையை கட்டினார். மறுபுறம் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் விளாசிய கெயில் மேயர்ஸ் 42 பந்துகளில் 3 சிக்சர் 4 பவுண்டரி அடித்து 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 21 ரன் நிகோலஸ் பூரான் 29 ரன் ஆகியோர் தங்கள் பங்குக்கு ரன் அடித்து கொடுத்த கையோடு ஆட்டமிழந்து வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு லக்னோ அணி 154 ரன்கள் சேர்த்தது. குருனால் பாண்ட்யா 4 ரன்களுடன் களத்தில் நின்றார். கடைசி பந்தில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு யுத்வீர் சிங் ரன் அவுட்டாகினார்.

அடுத்து 155 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. விறுவிறு ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷ்வி ஜெய்ஸ்வால் மட்டும் ஜோஸ் பட்லர் அணியின் ரன் கணக்கை வேகமாக உயர்த்தினர். நிலைத்து நின்று ஆடிய இந்த கூட்டணியை ஸ்டொய்னிஸ் பிரித்தார். அவரது பந்து வீச்சில் யாஷ்வி ஜெய்ஸ்வால் 40 ரன் எடுத்து அவுட்டானார்.

மறுபுறம் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு அவசரகதியில் ஓடிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் (2 ரன்) ரன் அவுட்டாகி வெளியேறினார். இந்த முறை ஸ்டொய்னிஸ் பந்து வீச்சில் மற்றொரு விக்கெட் விழுந்தது. 44 ரன்களுடன் களத்தில் நின்ற ஜாஸ் பட்லர், ஸ்டொய்னிஸ் பந்து வீச்சில் ரவி பிஷ்னாயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ராஜஸ்தான் அணிக்கு இறங்குமுகமாகவே காணப்பட்டது. தேவ்துத் படிக்கல் 26 ரன், ஷிம்ரொன் ஹெட்மயர் 2 ரன் துருவ் ஜூரல் டக் அவுட் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணியால் 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவினாலும் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப் படியலில் ராஜஸ்தான் அணி முதலிடத்தை தக்க வைத்துல் கொண்டது. அதேநேரம் லக்னோ அணி 2வது இடத்திற்கு முன்னேறியது. மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க : 14 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை அணி ஹாட்ரிக் வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.