ETV Bharat / sports

RCB Vs KKR : சொந்த ஊரில் பெங்களூருக்கு பெருத்த ஏமாற்றம்! கோலி கேப்டன்சியில் மீண்டும் தோல்வியா? - கொல்கத்தா Vs பெங்களூரு ஐபிஎல் கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

ipl 2023
ipl 2023
author img

By

Published : Apr 27, 2023, 6:39 AM IST

பெங்களூரு : 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 35வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நீண்ட நாட்களுக்கு பிறகு பெங்களூரு அணியை விராட் கோலி வழிநடத்தினார்.

டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். ஜேசன் ராய் மற்றும் நாராயண் ஜெகதீசன் ஆகியோர் கொல்கத்தா அணியின் இன்னிங்சை தொடங்கினர். நிதானமாக விளையாடி இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி அணியின் ஸ்கோரை சீரான இடைவெளியில் உயர்த்தினர்.

27 ரன்கள் எடுத்த ஜெகதீசன், விஜயகுமார் வீசிய பந்தில் டேவிட் வில்லேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அரை சதம் அடித்த ஜேசன் ராய் (56 ரன்) அதே விஜயகுமார் வீசிய பந்தில் இறங்கி ஆட முயன்று போல்டாகினார். அடுத்தடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 31 கேப்டன் நிதிஷ் ரானா 48 ரன் என தங்கள் பங்குக்கு ரன் குவித்து ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 200 ரன்கள் எடுத்தது. அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் 18 ரன்களுடன் களத்தில் நின்றார். பெங்களூரு அணியில் விஜயகுமார், வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தும் முகமது சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

200 ரன்கள் என்ற சற்று கடினமான ஸ்கோரை எதிர்கொண்டு பெங்களூரு அணி களமிறங்கியது. நீண்ட நாட்களுக்கு பின் கேப்டனாக களமிறங்கிய விராட் கோலி அணியின் வெற்றிக்காக போராட மறுபுறம் அடுக்கி வைத்த சீட்டுக் கட்டுகளிள் கல் எறிந்தது போல் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின.

தொடக்க வீரர் பாப் டு பிளெஸ்சிஸ் 17 ரன், ஷபாஸ் அகமது 2 ரன், கிளைன் மேக்ஸ்வெல் 5 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே சிறுது நேரம் மட்டும் நீடித்த மஹிபல் லோம்ரர் மட்டும் 34 ரன்கள் எடுத்து சிறிது ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடினார். மஹிபால் அவுட்டான அடுத்த கணம் மீண்டும் பழைய நிலையே நீடிக்கத் தொடங்கியது.

அரை சதம் தாண்டி நீண்ட நேரம் போராடி வந்த விராட் கோலியும் 54 ரன்கள் எடுத்து ரஸ்செல் பந்து வீச்சில் கேட்சானார். ஆட்டம் மெல்ல மெல்ல கொல்கத்தா பக்கம் நகரத் தொடங்கியது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், சுயேஷ் சர்மா, ஆந்திரே ரஸ்செல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். வருண் சக்கரவர்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதையும் படிங்க : GT Vs MI : மும்பைக்கு போதாத காலம்! சென்னைக்கு டஃப் கொடுக்குமா குஜராத் டைட்டன்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.