பெங்களூரு: ஞாயிற்றுக்கிழமை (மே 21ஆம் தேதி) நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அடித்த அதிரடி மற்றும் அசத்தல் சதம், அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலின் ‘சத சாதனையை’ முறியடிக்க உதவியது.
198 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 19.1 ஓவரில், 198 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது மட்டுமல்லாது, பெங்களூரு அணியை, அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது சதத்தை பதிவு செய்த கோலி , 61 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 14 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடக்கம். இதில் அவரின் ஸ்டிரைக் ரேட் 165 சதவீதமாக இருந்தது.
கோஹ்லி, சிறப்பாக விளையாடிய போதிலும், குஜராத் அணியின், சுப்மான் கில் உள்ளிட்டோரின் அபரிமிதமான ஆட்டத்தால், இந்த போட்டியில் தோல்வியுற்ற பெங்களூரு அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. நடப்பு தொடரில், 14 போட்டிகளில் விளையாடி உள்ள கோலி , 639 ரன்கள் எடுத்து உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில், கோலி அடித்த இந்த ஸ்கோரே, அவரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முந்தைய போட்டியில், அடித்த சதத்தின் மூலம், ஐபிஎல் தொடரில், கிறிஸ் கெயிலின் சத சாதனையை, கோலி சமன் செய்து இருந்தார்.
தற்போதைய ஐபிஎல் சீசனில், கோஹ்லியின் சராசரியாக 53.25 சதவீதமாகவும், ஒட்டுமொத்த ஸ்டிரைக் ரேட் 140 க்கும் குறைவாகவே உள்ளது. இந்த தொடரில், அவ்ர் இரண்டு சதங்கள் மற்றும் 6 அரை சதங்கள் அடித்து உள்ளார். இந்த தொடரில், 457 பந்துக்களை எதிர்கொண்ட கோஹ்லி, 81 பவுண்டரிகளையும், 16 சிக்ஸர்களையும் விளாசி உள்ளார்.
கோஹ்லி, தனது ஐபிஎல் வரலாற்றில் 237 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் அதிகபட்சமாக 113 ரன்களை எடுத்துள்ளார். இதன் சராசரி 37.25 சதவீதம் ஆகும். ஸ்டிரைக் ரேட் 130 சதவீதமாக உள்ளது. 50 அரை சதங்கள், 7 சதங்களை, 234 சிக்ஸர்கள் மற்றும் 643 பவுண்டரிகள் மூலம் விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலியின் பங்களிப்பை வெகுவாக பாராட்டி உள்ளார். , ஆரம்பம் முதலே ஈரமாக இருந்த ஒரு விக்கெட்டை "நம்பமுடியாத நாக்" என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். "விராட் கோலி நம்பமுடியாத ஆட்டக்காரர் எங்களுக்கு ஆட நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கவே, நல்ல ஸ்கோரை எட்டினோம் என்று நினைத்தேன். ஆனால் சுப்மான் கில் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக விளையாடி எங்களிடமிருந்து ஆட்டத்தை பறித்து விட்டடார்" என்று டு பிளெசிஸ் தெரிவித்து உள்ளார்.
பிளே ஆப் சுற்றுக்கு முன்பே பெங்களூரு அணி வெளியேற்றப்பட்டதில் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளதாக தெரிவித்து உள்ள டு பிளெசிஸ், "ஒரு நல்ல போட்டியை வெற்றியுடன் முடிக்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் மைதானம், மிகவும் ஈரமாக இருந்தது. முதல் இன்னிங்ஸிலும் மைதானம், ஈரமாகவே இருந்தது, ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அதிக பிடிப்பு இல்லாததால், நாங்கள் இரண்டாவது இன்னிங்ஸின் போது சில முறை பந்தை மாற்ற வேண்டியிருந்தது" என்று டு பிளெசிஸ் குறிப்பிட்டு உள்ளார்.