ETV Bharat / sports

வீரர்களை குறிவைக்கும் கரோனா....ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு! - ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்

IPL
ஐபிஎல்
author img

By

Published : May 4, 2021, 1:10 PM IST

Updated : May 4, 2021, 1:44 PM IST

13:05 May 04

பல வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, நடுப்பு ஐபிஎல் தொடர் நிறுத்தப்படுவதாக பிசிசிஐ துணைதலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

கரோனா நெருக்கடிக்கு மத்தியில், ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. இதுவரை 29 லீக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், நேற்றை கேகேஆர் - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டமானது இரண்டு கொல்கத்தா வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, ரத்து செய்யப்பட்டது.

இன்னும் சில வீரர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதியானது. வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு பயோ பபுல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், வீரர்களுக்கு எப்படி கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடைபெற்ற அவசர கூட்டத்தில், ஐபிஎல் நிர்வாக குழு மற்றும் பிசிசிஐ ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, நடப்பு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நடுப்பு ஐபிஎல் தொடர் நிறுத்தப்படுவதாக பிசிசிஐ துணைதலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்திருந்தார். 

கரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாகிவருகின்றது. நாள் ஒன்றுக்கு 3 லட்சத்து 50,000க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 3,000 உயிரிழிப்புகள் நிகழ்ந்துவருகின்றது. இதற்கு மத்தியில், போட்டிகள் நடத்தப்பட வேண்டுமா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பிவந்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : May 4, 2021, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.