ETV Bharat / sports

MI vs SRH: சவால் விடும் சன்ரைசர்ஸ்! வெற்றிப் பாதையில் பயணிக்குமா மும்பை? - வெற்றி பாதையில் பயணிக்குமா மும்பை

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளுமே தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த நிலையில், அதன்பிறகு களம் இறங்கிய இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்? விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

iplmatch
ஐபிஎல் போட்டி
author img

By

Published : Apr 18, 2023, 6:25 AM IST

ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 18) நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடக்கத்தில் பெங்களூரு, சென்னை அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த மும்பை அணி அதன்பின் சுதாரித்து விளையாடியது. அதன் பயனாக, டெல்லி, கொல்கத்தா அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று மீண்டுள்ளது. இதேபோல், ராஜஸ்தான், லக்னோ அணிகளிடம் வீழ்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பஞ்சாப், கொல்கத்தா அணிகளை வீழ்த்தி, வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. நடப்பு சீசனில் 3வது வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் இரு அணிகளும் களம் இறங்குகின்றன.

மும்பை அணி எப்படி?: கடந்த சில ஆட்டங்களில் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் ரன் குவிக்க முடியாமல் திணறிய நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அவர், 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஃபார்முக்கு திரும்பியுள்ள சூர்யகுமார் அதிரடியை தொடர்வார் என எதிர்பார்க்கலாம். கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷண் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தால் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கணிசமான ஸ்கோரை குவிக்கலாம். திலக் வர்மா, கேமரூன் க்ரீன், டிம் டேவிட் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை கொடுத்து வருகின்றனர்.

வருவாரா ஆர்ச்சர்?: பந்துவீச்சை பொறுத்தவரை அனைவரது பார்வையும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் மீது தான் உள்ளது. அவர் காயத்தில் இருந்து குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை உடல் தகுதி பெற்றிருந்தாலும், இன்றைய ஆட்டத்தில் அவரை களம் இறக்கும் எண்ணம் மும்பை அணியிடம் இல்லை என்றே தெரிகிறது. மெரிடித், ஷோகீன், அனுபவ வீரர் பியூஷ் சாவ்லா முழு திறமையை வெளிப்படுத்தினால், சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியும்.

கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஐபிஎல் போட்டிகளில் தடம் பதித்துள்ளார். கடந்த போட்டியில் 2 ஓவர்கள் வீசிய அவர் 17 ரன்களை விட்டுக்கொடுத்தார். எனினும் அவர் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டால், திறமையை நிரூபிக்கும் வகையில் விளையாடுவார் என நம்பலாம்.

மிரட்டும் பேட்டிங்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஹாரி ப்ரூக் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசி அசத்தினார். நடப்பு சீசனில் முதல் சதத்தை பதிவு செய்த அவர், சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார். மயங்க் அகர்வால், கேப்டன் மார்க்ரம், ராகுல் திரிபாதியிடம் சிறப்பான பங்களிப்பை எதிர்பார்க்கலாம்.

'பவுலிங்கில் கவனம்': பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் அணி சற்று பலவீனமாகவே உள்ளது. தமிழ்நாடு வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகின்றனர். மார்க்கண்டே ,ஜேன்சன், புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக் நம்பிக்கை அளிக்கின்றனர். பந்துவீச்சாளர்கள் பொறுப்புடன் விளையாடினால் மட்டுமே, மும்பை அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த முடியும். ஹைதராபாத் அணி சொந்த மண்ணில் விளையாடுவதால், மும்பை அணிக்கு நிச்சயம் நெருக்கடி கொடுக்கும் என நம்பலாம். இரு அணிகளுமே சமபலம் கொண்டுள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

நேருக்கு நேர்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் இதுவரை 19 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் சன்ரைசர்ஸ் 9, மும்பை அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

போட்டி எங்கே?: இன்றைய ஆட்டம் ஹைதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஹைதராபாத் உத்தேச அணி: மயங்க் அகர்வால், ஹாரி ப்ரூக், ராகுல் திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), அபிஷேக் சர்மா, க்ளாசென் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜேன்சன், மயங்க் மார்க்கண்டே, புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக்/ நடராஜன்.

மும்பை உத்தேச அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷண் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேமரூன் க்ரீன், நேஹல் வாத்ரா, டிம் டேவிட், ஷோகீன், பியூஷ் சாவ்லா, மெரிடித், டுவான் ஜேன்சன்/பெஹ்ரென்டாஃப்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.