ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரின் 60ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டுபிளெஸ்ஸி, பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 18 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் டுபிளெஸ்ஸி - கோலி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்தது.
பின்னர் டு பிளெஸ்ஸியுடன், மேக்ஸ்வேல் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினர். டு பிளெஸ்ஸி 55, மேக்ஸ்வெல் 54 ரன்களில் வெளியேறினர். லோம்ரோர் 1 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானார். இதைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அனுஜ் ராவத் 11 பந்துகளில், 29 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. ராவத் 29, பிரேஸ்வெல் 9 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
ராஜஸ்தான் அணியில் ஆடம் ஸம்பா, ஆசிப் தலா 2 விக்கெட்கள், சந்தீப் சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.