ETV Bharat / sports

IPL 2023: காயத்தால் அடுத்தடுத்து விலகிய வீரர்கள்.. அணிகளின் முடிவுகள் என்ன? - மாற்று வழியை யோசிக்கும் அணிகள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தாலும், நடப்பு சீசனில் காயம் காரணமாக பல்வேறு அணிகளில் இருந்து வீரர்கள் வெளியேறியுள்ளனர். இதனால் விழிபிதுங்கும் அணிகள், மாற்று வழியை யோசித்து வருகின்றன.

players wound
வீரர்கள் காயம்
author img

By

Published : Apr 7, 2023, 3:23 PM IST

ஹைதராபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மே 28ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் நிலையில், தற்போது லீக் ஆட்டங்கள் நடக்கிறது. கோப்பையை வெல்லும் முனைப்பில் ஒவ்வொரு அணிகளும், எதிரணிக்கு டஃப் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் முன்னணி வீரர்கள் காயத்தால் விலகியிருப்பது, பல்வேறு அணிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருசில வீரர்கள் ஐபிஎல் தொடர் தொடங்கு முன்பே, விலகிவிட்டனர்.

பும்ரா, பண்ட்: காயம் காரணமாக அவதியடைந்து வரும் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, நடப்பு சீசனில் விளையாடவில்லை. அணியில் அவர் இடம்பெறாதது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மேலும் ஜூன் 7ம் தேதி தொடங்கும் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் அவர் விலகியுள்ளார். அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அவர் தயாராகிவிடுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதேபோல் கார் விபத்தில் படுகாயம் அடைந்த டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட், குணமடைந்து வருகிறார். குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் டெல்லி அணி மோதிய கடைசி ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார். சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவர் களம் இறங்குவது சந்தேகம் தான். ரிஷப் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கேன் வில்லியம்சன்: குஜராத் அணியின் முன்னணி வீரரான கேன் வில்லியம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஆட்டத்தில் காயம் அடைந்தார். வலது கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால், அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகியுள்ளார். உலககக் கோப்பை தொடரிலும் அவர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

டாப்லீ, ரிச்சர்ட்சன்: பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் டாப்லீக்கு, மும்பை அணியுடனான ஆட்டத்தின் போது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்கா வீரர் பேர்னல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் இலங்கை வீரர் ஹசரங்கா வரும் 10ம் தேதியும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 14ம் தேதியும் அணியில் இணைய உள்ளதால், பெங்களூரு அணி நிம்மதி அடைந்துள்ளது. இதேபோல் காயம் காரணமாக மும்பை அணியில் இருந்து விலகியுள்ள ரிச்சர்ட்சனுக்கு பதிலாக, ரிலே மெரிடித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

படிதாருக்கு பதிலாக விஜய்குமார்: காயம் காரணமாக பெங்களூரு அணியின் முன்னணி வீரர் ராஜட் படிடார் களம் இறங்காத நிலையில், அவர் நடப்பு சீசனில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வியாஷக் விஜய் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அவர் ரூ.20 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பஞ்சாப் அணியில் இருந்து பேர்ஸ்டோ, ராஜஸ்தானில் இருந்து பிரசீத் கிருஷ்ணா, கொல்கத்தா அணியில் இருந்து ஷகீப் அல் ஹாசன் ஆகியோர் தொடர் முழுவதும் விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் நடப்பு சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், வீரர்களுக்கு ஏற்படும் காயம் பெரிய அளவில் அணிகளை பாதிப்பதில்லை என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: LSG vs SRH: புதிய கேப்டன் மார்க்ரம் வருகை; உதிக்குமா 'சூரியன்'?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.