ETV Bharat / sports

IPL 2023: வீரர்களை வரம்பு மீறி விமர்சிப்பது சரியா? எல்லை மீறும் ரசிகர்கள்...எதிர்கால கிரிக்கெட்டுக்கு நல்லதா? - வீரர்களை விமர்சிப்பது சரியா

கிரிக்கெட் வீரர்கள் விமர்சனத்துக்கு ஆளாவது புதிதல்ல. எதிரணியுடன் சரியாக விளையாடாத வீரர்களை ரசிகர்கள் விமர்சிப்பது வழக்கம். அவ்வளவு ஏன்...? சில வீரர்கள் வீட்டின் மீது, தாக்குதல் கூட நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், நன்றாக விளையாடும் வீரர்கள் கூட கடுமையான விமர்சனத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது எதிர்கால கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானதா?

ipl cricket
ஐபிஎல் கிரிக்கெட்
author img

By

Published : May 25, 2023, 10:53 PM IST

ஹைதராபாத்: பொதுவாக கிரிக்கெட் களத்தில் இருதரப்பு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது சகஜம். வெற்றி மட்டுமே அவர்களது முக்கிய குறிக்கோளாக இருக்கும். களத்தில் ஏற்பட்ட வெறுப்பு, வீரர்கள் மத்தியில் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. காலப்போக்கில் மறைந்து விடும் என்பது தான் உண்மை. இது ஒருபுறம் இருக்க எந்த ஆண்டும் இல்லாத வகையில், நடப்பு ஐபிஎல் சீசனில் ஏகப்பட்ட சர்ச்சைகள்.

இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நடப்பு சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது. குறிப்பாக அந்த அணியின் முன்னணி வீரர் விராட் கோலி, ஆக்ரோஷமாக விளையாடினார். லக்னோ அணியுடனான லீக் ஆட்டத்தில் அந்த அணியின் பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் மற்றும் கோலி இடையே திடீரென வார்த்தை போர் ஏற்பட்டது. இந்த பிரச்னையில் அணியின் ஆலோசகர் கம்பீர் தலையிட்டதால், கோலிக்கும், கம்பீருக்கும் மோதல் உருவாகி இணையத்தில் பேசுபொருளானது. கோலி - கம்பீர் தரப்பு ரசிகர்கள் இணையத்தில் பரஸ்பரம் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

நடப்பு சீசனில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொண்ட பெங்களூரு அணி, தோல்வியை தழுவியதால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. ஆனால் இந்த தோல்வியை பொறுக்க முடியாத அந்த அணியின் ரசிகர்கள், எதிரணி வீரர்களை விமர்சித்த விதம் தான், சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சதம் விளாசி அசத்திய குஜராத் அணியின் முன்னணி வீரர் சுப்மன் கில், கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தின் கார் விபத்துக்குள்ளான புகைப்படத்தை பதிவிட்ட பெங்களூரு ரசிகர் ஒருவர், இந்த காரில் சுப்மன் கில் சென்றிருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார். இந்த வார்த்தைகளை அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியாது.

அத்துடன் இல்லாமல், சுப்மன் கில்லின் சகோதரி ஷானில்லை திருநங்கை என குறிப்பிட்டு விமர்சித்திருந்தார் பெங்களூரு அணியின் மற்றொரு ரசிகர். முழு திறனை வெளிப்படுத்தி சதம் விளாசிய ஒரு வீரர் மற்றும் அவரது குடும்பத்தினரை விமர்சிப்பது சரியா? என நெட்டிசன்கள் சிலர் கொந்தளித்துள்ளனர். சுப்மன் கில்லுடன் சிறப்பாக விளையாடிய தமிழ்நாட்டு வீரர் விஜய் சங்கரும், ஆர்சிபி ரசிகர்களின் மோசமான விமர்சனத்தில் இருந்து தப்பவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்கள் இதுபோன்று செயல்படும் நிலையில் அவர்களை அந்த அணியின் சீனியர் வீரர்களோ, அணி நிர்வாகமோ கண்டிக்கவில்லை. அப்படியென்றால், ரசிகர்களின் இந்த மோசமான செயலை, பெங்களூரு அணி நிர்வாகம் வரவேற்கிறதா என நெட்டிசன்கள் சிலர் வினவியுள்ளனர்.

Shubman gill issue
சுப்மன் கில்லை விமர்சித்து பதிவு

இதேபோல சென்னை அணி ரசிகர்கள் மீதும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார் அந்த அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. தோனியின் ஆட்டத்தை காண விரும்பும் ரசிகர்கள், தாம் ஆட்டமிழக்க விரும்புவதாக ஏற்கனவே புலம்பியிருந்தார். குஜராத் அணிக்கு எதிரான முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா மதிப்பு வாய்ந்த வீரர் என்ற விருதை பெற்றார். பின்னர், "நான் மதிப்பு வாய்ந்த வீரர் என்பது சில ரசிகர்களுக்கு மட்டும் புரியவில்லை" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

கிரிக்கெட் என்பது ஒரு பொழுது போக்கு விளையாட்டு. அதில் சக வீரர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். வீரர்கள் மீதான ரசிகர்களின் விமர்சனங்கள் எல்லை மீறினால் வெறுப்புணர்வு அதிகமாகும். இது ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்துக்கு நிச்சயம் ஆரோக்கியமானதாக இருக்காது. வீரர்களுக்கும் ஆட்டத்தின் மீதான ஆர்வம் குறையும். வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு சகஜம் என்பதை, அதி தீவிர ரசிகர்கள் புரிந்து கொண்டால் நல்லது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.