மும்பை: ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் நேற்று (மே 18) மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்த ஹைதராபாத் அணி, முதலில் பேட்டிங் செய்து 193 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 76 ரன்களை எடுத்தார். மும்பை சார்பில் ரமன்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து பேட்டிங் ஆடிய மும்பை அணிக்கு ஓப்பனர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த தொடர் முழுவதும் ஏமாற்றத்தை அளித்துவந்த ரோஹித் - இஷான் கிஷன் ஜோடி நேற்றைய போட்டியில் விரைவாக ரன்களை சேர்த்தது.
-
That's that from Match 65#MumbaiIndians fought hard, but fell short in the end as @SunRisers win by 3 runs.
— IndianPremierLeague (@IPL) May 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard - https://t.co/U2W5UAx6di #MIvSRH #TATAIPL pic.twitter.com/43SRO9X85o
">That's that from Match 65#MumbaiIndians fought hard, but fell short in the end as @SunRisers win by 3 runs.
— IndianPremierLeague (@IPL) May 17, 2022
Scorecard - https://t.co/U2W5UAx6di #MIvSRH #TATAIPL pic.twitter.com/43SRO9X85oThat's that from Match 65#MumbaiIndians fought hard, but fell short in the end as @SunRisers win by 3 runs.
— IndianPremierLeague (@IPL) May 17, 2022
Scorecard - https://t.co/U2W5UAx6di #MIvSRH #TATAIPL pic.twitter.com/43SRO9X85o
டிம் டேவிட் வெறியாட்டம்: முதல் விக்கெட்டுக்கு 95 ரன்களை இந்த ஜோடி எடுத்தது. ரோஹித் 48, கிஷன் 42, திலக் வர்மா 8, டேனியல் சாம்ஸ் 15, ஸ்டப்ஸ் 2 ரன்கள் என அடுத்தடுத்து வீரர்கள் நடையைக் கட்டினாலும், மறுமுனையில் டிம் டேவிட் மும்பை அணிக்கு விறுவிறுவென ரன்களை குவித்து வந்தார். அவர் நடராஜன் வீசிய 18ஆவது ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்திய நிலையில், அதே ஓவரின் கடைசி பந்தில் ரன் - அவுட்டாகி ஏமாற்றதுடன் வெளியேறினார்.
மெய்டன் விக்கெட் ஓவர்: அவர் 18 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 46 ரன்களை சேர்த்திருந்தார். பின்னர் வந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், அறிமுக வீரருமான சஞ்சய் யாதவ் புவேனஷ்வர் வீசிய 19ஆவது ஓவரில் டக் - அவுட்டானார். மேலும், அந்த ஓவரில் ஒரு ரன் கூட எடுக்கப்படாததால், கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது.
-
Punch Super Striker of the Day for the Match between Mumbai Indians and Sunrisers Hyderabad is Tim David.#TATAIPL @TataMotors_Cars #PunchSuperStriker #GameThatVibes #MIvSRH pic.twitter.com/p5IOTs5fwC
— IndianPremierLeague (@IPL) May 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Punch Super Striker of the Day for the Match between Mumbai Indians and Sunrisers Hyderabad is Tim David.#TATAIPL @TataMotors_Cars #PunchSuperStriker #GameThatVibes #MIvSRH pic.twitter.com/p5IOTs5fwC
— IndianPremierLeague (@IPL) May 17, 2022Punch Super Striker of the Day for the Match between Mumbai Indians and Sunrisers Hyderabad is Tim David.#TATAIPL @TataMotors_Cars #PunchSuperStriker #GameThatVibes #MIvSRH pic.twitter.com/p5IOTs5fwC
— IndianPremierLeague (@IPL) May 17, 2022
திரிபாதி ஆட்டநாயகன்: இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஃபரூக்கி வீசிய அந்த ஓவரில் மொத்தம் 15 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் சார்பில் உம்ரான் மாலிக் 3 ஓவர்களில் 23 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்த ராகுல் திரிபாதி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பிளே ஆஃப் கால்குலேட்டர்: வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளது. நெட் ரன்-ரேட் அடிப்படையில், மிகவும் மோசமான நிலையில் உள்ள ஹைதராபாத் பஞ்சாப் உடனான தனது கடைசி லீக் ஆட்டத்தில் பெரிய அளவிலான வெற்றி பதிவுசெய்தால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று ரேசில் நிலைக்க முடியும்.
-
Rahul Tripathi is adjudged Player of the Match for his excellent knock of 76 off 44 deliveries as #SRH win by 3 runs.#TATAIPL #MIvSRH pic.twitter.com/OieNVAKF0o
— IndianPremierLeague (@IPL) May 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rahul Tripathi is adjudged Player of the Match for his excellent knock of 76 off 44 deliveries as #SRH win by 3 runs.#TATAIPL #MIvSRH pic.twitter.com/OieNVAKF0o
— IndianPremierLeague (@IPL) May 17, 2022Rahul Tripathi is adjudged Player of the Match for his excellent knock of 76 off 44 deliveries as #SRH win by 3 runs.#TATAIPL #MIvSRH pic.twitter.com/OieNVAKF0o
— IndianPremierLeague (@IPL) May 17, 2022
இருப்பினும், டெல்லி பெங்களூரு அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்றுவிட்டால், ஹைதராபாத் மட்டுமின்றி பஞ்சாப், கொல்கத்தா உள்ளிட்ட அணிகளின் கனவு பொய்த்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணி, 10 தோல்விகள், 3 வெற்றிகள் என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: அதிரடி மன்னர்கள் கெயில் , டி வில்லியர்ஸை கவுரவித்த ஆர்.சி.பி!