மகாராஷ்டிராவில் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நடந்து வருகிறது. இதுவரை ஐந்து லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று (மார்ச் 30) ஆறாவது லீக் ஆட்டம் டிஒய் படில் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் காணலாம்.
ஆர்சிபி அணி வீரர்கள்: டுபிளசிஸ்(கேப்டன்), விராட் கோலி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
கேகேஆர் அணி வீரர்கள்: வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷெல்டன் ஜாக்சன் (கீப்பர்), உமேஷ் யாதவ், சிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி. நேற்றைய ஐந்தாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. நாளைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: ராக்கெட்டாக பறக்கவிட்ட ராஜஸ்தான் - புஸ்வானமானது எஸ்ஆர்ஹெச்