மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேற்று (மே 8) நவி மும்பையில் உள்ள டி.ஓய். பாட்டீல் மைதானத்தில் மோதின. போட்டியில் டாஸை இழந்த சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து, 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டேவான் கான்வே 87 ரன்களை எடுத்தார். டெல்லி பந்துவீச்சில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பவர்பிளேவிற்கு பின் பரிதாபம்: 209 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கம் சற்று ஆறுதலாகவே அமைந்தது. ஸ்ரீகர் பாரத், வார்னர் ஆகியோர் பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டமிழந்தாலும், மிட்செல் மார்ஷ், கேப்டன் பந்த் சற்று ஆறுதல் அளித்தனர். ஆனால், பவர்பிளே முடிந்தபின்னர் அந்த அணியின் விக்கெட்டுகள் கடகடவென சரியத் தொடங்கின.
-
WATCH - 4,4,4: Conway goes after Kuldeep!
— IndianPremierLeague (@IPL) May 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
📽️📽️https://t.co/nO8gePszJa #TATAIPL #CSKvDC
">WATCH - 4,4,4: Conway goes after Kuldeep!
— IndianPremierLeague (@IPL) May 8, 2022
📽️📽️https://t.co/nO8gePszJa #TATAIPL #CSKvDCWATCH - 4,4,4: Conway goes after Kuldeep!
— IndianPremierLeague (@IPL) May 8, 2022
📽️📽️https://t.co/nO8gePszJa #TATAIPL #CSKvDC
ஒரு கட்டத்தில், டெல்லி அணி 72/2 என்ற நிலையில் இருந்து, 99/8 என்று தலைகீழாக மாறியது. அதாவது, ஏறத்தாழ 7 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகளை வரிசையாக இழந்து வெறும் 27 ரன்களை மட்டுமே எடுத்தது. இறுதிக்கட்டத்தில், ஷர்துல் தாக்கூர் சற்று ஆறுதல் அளித்தாலும், டெல்லி பின்வரிசை பேட்டர்கள் பெவிலியனுக்கு தொடர்ந்து அணி வகுந்தனர்.
அசத்தல் மொயின்: எனவே, டெல்லி 17.4 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. இதன்மூலம், சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தனது 4ஆவது வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணியின் மொயின் அலி 4 ஓவர்களிலல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி 13 ரன்களை மட்டுமே கொடுத்தார். சிரம்ஜித் சிங், முகேஷ் சௌத்ரி, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். பேட்டிங்கில் கலக்கிய டேவான் கான்வே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
-
Yellow all the way 💛💛
— IndianPremierLeague (@IPL) May 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
A comprehensive 91-run win for Chennai Super Kings over Delhi Capitals - WHAT A WIN! #TATAIPL #CSKvDC #IPL2022 pic.twitter.com/O7yTOV0FnQ
">Yellow all the way 💛💛
— IndianPremierLeague (@IPL) May 8, 2022
A comprehensive 91-run win for Chennai Super Kings over Delhi Capitals - WHAT A WIN! #TATAIPL #CSKvDC #IPL2022 pic.twitter.com/O7yTOV0FnQYellow all the way 💛💛
— IndianPremierLeague (@IPL) May 8, 2022
A comprehensive 91-run win for Chennai Super Kings over Delhi Capitals - WHAT A WIN! #TATAIPL #CSKvDC #IPL2022 pic.twitter.com/O7yTOV0FnQ
புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி 8 புள்ளிகளை (4 வெற்றி, 7 தோல்வி) பெற்ற நிலையில், ஒரு இடம் முன்னேறி 8ஆவது இடத்தை பிடித்து, கேகேஆர் அணியை பின்னுக்குத் தள்ளியுள்ளது. தோல்வியடைந்த டெல்லி அணி 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 6 தோல்வி) 5ஆவது இடத்தில் உள்ளது.