மும்பை: ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு (மே 5) 7:30 மணிக்கு பிராபோர்ன் மைதானத்தில் நடக்கிறது. இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி 9 போட்டிகளில் 4 வெற்றிகள் 5 தோல்விகள் என்ற கணக்கில் 7ஆவது இடத்தில் உள்ளது. மறுப்புறம் ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 4 தோல்விகள் என்ற கணக்கில் 5ஆவது இடத்தில் உள்ளது.
பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய டெல்லிக்கு 6 புள்ளிகளும், ஹைதராபாத்துக்கு 8 புள்ளிகளும் தேவை. இரு அணிகளும் 5 போட்டிகள் மீதமுள்ளன. இந்த சீசனில் முதல்முறையாக இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளின் உத்தேசப்பட்டியல் பின்வருமாறு.
டெல்லி கேப்பிடல்ஸ்:
ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கேப்டன்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (கீப்பர்), ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர்/ஜெகதீஷா சுசித், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.
இதையும் படிங்க: சென்னை அணியை வீழ்த்தியது பெங்களூரு அணி