மும்பை: ஐபிஎல் தொடரின் 47ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு 7:30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புள்ளிப்பட்டியலில், ராஜஸ்தான் அணி மொத்தம் 9 போட்டிகளில் 6 வெற்றிகள் 3 தோல்விகள் என்ற கணக்கில் 3ஆவது இடத்தில் உள்ளது. மறுப்புறம் கொல்கத்தா அணி 9 போட்டிகளில் 6 வெற்றிகள் 3 தோல்விகள் என்ற கணக்கில் 8ஆவது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணிக்கு 5 ஆட்டங்கள் மீதமுள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய 4 ஆட்டங்களில் வெற்றிபெறவேண்டும். அந்த வகையில் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாகயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஆரோன் பின்ச், பாபா இந்திரஜித், ரிங்கு சிங், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா.
ராஜஸ்தான் ராயல்ஸ்: டிரென்ட் போல்ட், ஜோஸ் பட்லர், தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்/கீப்பர்), ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென், டேரில் மிட்செல், ஷிம்ரோன் ஹெட்மியர்.
இதையும் படிங்க: அனைத்தையும் சொல்லிக் கொடுக்க முடியாது... வெற்றிக்கு பின் தோனி சொல்லிய பாடம்