மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துவருகிறது. இந்த தொடரின் 23ஆவது லீக் ஆட்டம் நேற்று (ஏப். 13) எம்சிஏ மைதானத்தில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் வீரர்கள் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டினர். கேப்டன் மயங்க் அகர்வால் 32 பந்துகளுக்கு 52 ரன்களையும், ஷிகர் தவான் 50 பந்துகளுக்கு 70 ரன்களையும் எடுத்தனர். இதையடுத்து ஜிதேஷ் சர்மா 15 பந்துகளில் 30 ரன்களை குவித்தார்.
அந்த வகையில், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை குவித்தது. மறுப்புறம் மும்பை பந்துவீச்சாளர் பாசில் தம்பி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 199 ரன்கள் வெற்றி இலக்குடன் மும்பை அணி வீரர்கள் களமிறங்கினர்.
ஆனால், இஷான் கிஷன் 6 பந்துகளிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். கேப்டன் ரோஹித் சர்மா 17 பந்துகளில் 28 ரன்களுடன் வெளியேறினார். இருப்பினும், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா கூட்டணி அதிரடியாக ஆடியது. ப்ரீவிஸ் 25 பந்துகளுக்கு 49 ரன்களை குவித்தார்.
திலக் வர்மா 30 பந்துகளுக்கு 43 ரன்களை எடுத்தார். இவர்களது விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆடிவந்தார். ஆனால், அவரது விக்கெட்டும் போன பிறகு களமிறங்கிய வீரர்களால் ரன்களை எடுக்க முடியவில்லை.
எவ்வளவு போராடியும் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணியால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்படி பஞ்சாப் மூன்று வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திலும், மும்மை அணி 5 தொடர் தோல்விகளால் 10ஆவது இடத்திலும் உள்ளது. இதனால், மும்பை பிளே ஆஃப் செல்லுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 'பீஸ்ட்' பார்ட்னர்ஷிப்; சிஎஸ்கேவின் மிரட்டல் கம்பேக்!