மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாராஷ்டிராவில் நடந்துவருகிறது. இன்று (ஏப். 22) 34ஆவது ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில், "நாங்கள் முதலில் பந்துவீசவே திட்டமிட்டோம். புள்ளிப்பட்டியலில் முன்னேற விரும்புகிறோம்" என்றார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(கேப்டன்/கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், கருண் நாயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல்.
டெல்லி கேப்பிடல்ஸ்: ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த் (கேப்டன்/கீப்பர்), ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.
இதையும் படிங்க: சர்வதேச போட்டிகளில் இருந்துதான் ஓய்வு : ஃபினிஷிங்கில் இல்லை - மீண்டும் கலக்கிய தல தோனி!