மும்பை : இன்றைய ஐபிஎல் தொடரின் 11ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி மும்பை பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஷிகர் தவான், மில்லர் களத்தில் உள்ளனர்.
இதற்கு முன்னர் நடந்த இரு போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், இன்று பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.