துபாய்: ஐபிஎல் 2021 தொடரின் 52ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - சென்னை அணிகள் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டூ பிளேசிஸ் 76 (55) ரன்களை எடுத்தார். பஞ்சாப் அணி பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
-
7⃣6⃣ Runs
— IndianPremierLeague (@IPL) October 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
5⃣5⃣ Balls
8⃣ Fours
2⃣ Sixes@faf1307 put on an impressive show with the bat & anchored @ChennaiIPL's innings. 👏 👏 #VIVOIPL #CSKvPBKS
Watch his knock 🎥👇https://t.co/mktTLcn1u4
">7⃣6⃣ Runs
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
5⃣5⃣ Balls
8⃣ Fours
2⃣ Sixes@faf1307 put on an impressive show with the bat & anchored @ChennaiIPL's innings. 👏 👏 #VIVOIPL #CSKvPBKS
Watch his knock 🎥👇https://t.co/mktTLcn1u47⃣6⃣ Runs
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
5⃣5⃣ Balls
8⃣ Fours
2⃣ Sixes@faf1307 put on an impressive show with the bat & anchored @ChennaiIPL's innings. 👏 👏 #VIVOIPL #CSKvPBKS
Watch his knock 🎥👇https://t.co/mktTLcn1u4
ராகுலின் ராக்கெட்டுகள்
இதையடுத்து, பஞ்சாப் அணிக்கு கே.எல். ராகுல், மயாங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே ராகுல் அதிரடி ஆட்டத்தைக் கையாண்டார். இருப்பினும், ஷர்துல் வீசிய ஐந்தாவது ஓவரில் மயாங்க் அகர்வால் 12 (12), சர்ப்ரஸ் கான் 0 (3) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பவர்பிளே முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை எடுத்திருந்தது.
இதன்பின்னர், கே.எல். ராகுல் வேகமாக ரன்களை குவிக்கத்தொடங்கினார். இதனால், எட்டாவது ஓவரில் அரைசதம் கடந்து அசத்த, அடுத்த ஓவரில் ஷாருக் கான் 8 (10) ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
-
Dominant performance from @PunjabKingsIPL! 💪 💪
— IndianPremierLeague (@IPL) October 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Captain @klrahul11 leads the charge with the bat as #PBKS seal a clinical 6⃣-wicket win over #CSK. 👏 👏 #VIVOIPL #CSKvPBKS
Scorecard 👉 https://t.co/z3JT9U9tHZ pic.twitter.com/rBVh6CssHf
">Dominant performance from @PunjabKingsIPL! 💪 💪
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
Captain @klrahul11 leads the charge with the bat as #PBKS seal a clinical 6⃣-wicket win over #CSK. 👏 👏 #VIVOIPL #CSKvPBKS
Scorecard 👉 https://t.co/z3JT9U9tHZ pic.twitter.com/rBVh6CssHfDominant performance from @PunjabKingsIPL! 💪 💪
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
Captain @klrahul11 leads the charge with the bat as #PBKS seal a clinical 6⃣-wicket win over #CSK. 👏 👏 #VIVOIPL #CSKvPBKS
Scorecard 👉 https://t.co/z3JT9U9tHZ pic.twitter.com/rBVh6CssHf
சொதப்பிய சிஎஸ்கே
ராகுலின் தொடர் அதிரடியால், 10, 11, 12 ஆகிய மூன்று ஓவர்களில் மட்டும் பஞ்சாப் அணி 46 ரன்களை (ராகுல் - 29, மார்க்ரம் - 13, உதிரிகள் - 4) குவித்தது.
ஷர்துல் தாக்கூர் வீசிய 13ஆவது ஓவரின் முதல் பந்தில் மார்க்ரம் 13 (8) ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில், ராகுல் பவுண்டரி, சிக்ஸர்கள் எனப் பறக்கவிட்டு வெற்றியை உறுதிசெய்தார்.
இதனால், பஞ்சாப் அணி 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது, சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதன்மூலம், பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடனும் ஐந்தாம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் அதிக ரன்ரேட் பெற்று நான்காவது இடத்தில் நீடித்து வருகிறது.
மும்பையா அல்லது கொல்கத்தாவா
இன்று, நடைபெற்று வரும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா தோல்வியடைந்தாலும் பஞ்சாப் அணிக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IPL 2021: ஆர்சிபியை அடக்கி ஆறுதல் வெற்றிபெற்ற ஹைதராபாத்