ETV Bharat / sports

KKR vs SRH: டாஸ் வென்ற ஹைதராபாத்; கொல்கத்தா பந்துவீச்சு - SRH

கொல்கத்தா - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.

KKR vs SRH
KKR vs SRH
author img

By

Published : Oct 3, 2021, 7:57 PM IST

துபாய்: கரோனா காரணமாகப் பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம்கட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கின. இத்தொடரின், இன்று (அக். 3) இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், 49ஆவது லீக் ஆட்டத்தில், இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இன்று இரவு மோதுகிறது.

அணி மாற்றங்கள்

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. ஹைதராபாத் அணியில் சந்தீப் சர்மாவுக்குப் பதிலாக உம்ரன் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். கொல்கத்தா அணியில் டிம் சீஃபர்ட் நீக்கப்பட்டு ஷகிப் அல்-ஹாசனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: இயான் மார்கன் (கேப்டன்), சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதீஷ் ராணா, ஷகிப் அல்-ஹாசன், தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், சிவம் மவி, டிம் சவுத்தி, வருண் சக்கரவர்த்தி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஜேசன் ராய், விருத்திமான் சாஹா, ப்ரியம் கர்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், உம்ரன் மாலிக், சித்தார்த் கவுல்

இதையும் படிங்க: கிடைத்தது பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்... இவர்கள் தானா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.