ETV Bharat / sports

RCB vs PBKS: பெங்களூரு பேட்டிங்; பஞ்சாப் அணியில் 3 மாற்றங்கள் - விராட் கோலி

பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.

RCB vs PBKS
RCB vs PBKS
author img

By

Published : Oct 3, 2021, 3:33 PM IST

சார்ஜா: கரோனா காரணமாகப் பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம்கட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கின. இத்தொடரின், இன்று (அக். 3) இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், 48ஆவது லீக் ஆட்டத்தில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இன்று மாலை மோதுகிறது.

பஞ்சாப் அணியில் மாற்றங்கள்

சார்ஜாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்துள்ளது. பஞ்சாப் அணியில் ஃபாபியன் ஆலன், தீபக் ஹூடா, எல்லீஸ் ஆகியோருக்கு பதிலாக ஹர்பிரீத் பரர், மோயிஸ் ஹென்ரிக்ஸ், சர்பராஸ் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், கிளேன் மேக்ஸ்வெல், ஏபி டி வில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஜார்ஜ் கார்டன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யஷ்வேந்திர சஹால்.

பஞ்சாப் கிங்ஸ்: கே.எல். ராகுல் (கேப்டன்), மயாங்க் அகர்வால், மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், சர்பராஸ் கான், ஷாருக் கான், ஹர்பிரீத் பரர், மோயிஸ் ஹென்ரிக்ஸ், முகமது ஷமி, ரவி பிஷ்னாய்,அர்ஷ்தீப் சிங்

இதையும் படிங்க: பவானிபூர் இடைத்தேர்தல் - அசுர வேட்டையாடிய மம்தா பானர்ஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.