துபாய்: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
இதையடுத்து, இரண்டாம் கட்டப் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 40ஆவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று (செப். 27) மோதுகிறது.
அணிகளின் மாற்றங்கள்
ஹைதராபாத் அணி தரப்பில் டேவிட் வார்னருக்கு பதிலாக ஜேசன் ராய் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், கலீல் அகமது ஆகியோருக்கு பதிலாக அபிஷேக் சர்மா, ப்ரியம் கர்க், சித்தார்த் கவுல் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அணியில் டேவிட் மில்லர், ஷம்ஷி, கார்த்திக் தியாகி ஆகியோருக்கு பதிலாக கிறிஸ் மோரிஸ், எவின் லீவிஸ், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
A look at the Playing XI for #SRHvRR
— IndianPremierLeague (@IPL) September 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Live - https://t.co/ok6FRQ5VHf #SRHvRR #VIVOIPL pic.twitter.com/yt3Ra4KbKs
">A look at the Playing XI for #SRHvRR
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
Live - https://t.co/ok6FRQ5VHf #SRHvRR #VIVOIPL pic.twitter.com/yt3Ra4KbKsA look at the Playing XI for #SRHvRR
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
Live - https://t.co/ok6FRQ5VHf #SRHvRR #VIVOIPL pic.twitter.com/yt3Ra4KbKs
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஜேசன் ராய், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், ப்ரியம் கர்க், அபிஷேக் சர்மா, ஜசான் ஹோல்டர், அப்துல் சமத், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லீவிஸ், லியம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோம்ரோர், ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேத்தியா, முஷ்தபிஷூர் ரஹ்மான், சேதன் சக்காரியா, ஜெயதேவ் உனத்கட்.
இதையும் படிங்க: IPL 2021: ஹர்ஷலின் ஹாட்ரிக்கால் அதலபாதளத்தில் வீழ்ந்தது மும்பை!