அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 26ஆவது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று (ஏப்.30) மோதுகின்றன.
இப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இந்தத் தொடரில் பெங்களூரு அணி விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் வென்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திலும், பஞ்சாப் அணி ஆறு போட்டிகளில் இரண்டில் மட்டும் வென்று 4 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.
-
VK 🤜🏻🤛🏻 KL
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
IT’S GO TIME! #PlayBold #WeAreChallengers #IPL2021 #PBKSvRCB #StayHomeStaySafe #DareToDream pic.twitter.com/bxHpOYQKP0
">VK 🤜🏻🤛🏻 KL
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 30, 2021
IT’S GO TIME! #PlayBold #WeAreChallengers #IPL2021 #PBKSvRCB #StayHomeStaySafe #DareToDream pic.twitter.com/bxHpOYQKP0VK 🤜🏻🤛🏻 KL
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 30, 2021
IT’S GO TIME! #PlayBold #WeAreChallengers #IPL2021 #PBKSvRCB #StayHomeStaySafe #DareToDream pic.twitter.com/bxHpOYQKP0
இதுவரை பஞ்சாப் அணியும், பெங்களூரு அணியும் மொத்தம் 26 போட்டிகளில் மோதி, பஞ்சாப் 14 போட்டிகளிலும், பெங்களூரு 12 போட்டிகளில் வென்றுள்ளன. பஞ்சாப் அணியில் மயாங்க் அகர்வால், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு பிராப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் ப்ரர், ரிலே மெரிடித் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு தரப்பில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக ஷபாஸ் அகமதிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
-
Team News:
— IndianPremierLeague (@IPL) April 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
3⃣ changes for @PunjabKingsIPL as Prabhsimran Singh, Riley Meredith & Harpreet Brar picked in the team.
1⃣ change for @RCBTweets as Shahbaz Ahmed named in the team. #VIVOIPL #PBKSvRCB
Follow the match 👉 https://t.co/GezBF86RCb
Here are the Playing XIs 👇 pic.twitter.com/p2RAagZ294
">Team News:
— IndianPremierLeague (@IPL) April 30, 2021

Here are the Playing XIs 👇 pic.twitter.com/p2RAagZ294Team News:
— IndianPremierLeague (@IPL) April 30, 2021
3⃣ changes for @PunjabKingsIPL as Prabhsimran Singh, Riley Meredith & Harpreet Brar picked in the team.
1⃣ change for @RCBTweets as Shahbaz Ahmed named in the team. #VIVOIPL #PBKSvRCB
Follow the match 👉 https://t.co/GezBF86RCb
Here are the Playing XIs 👇 pic.twitter.com/p2RAagZ294
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், தேவ்தத் படிக்கல், ஷபாஸ் அகமது, ராஜத் பட்டிதர், யஷ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், டேனியல் சாம்ஸ், கைல் ஜேமிசன்
பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல் (கேப்டன்), பிராப்சிம்ரன் சிங், கிறிஸ் கெயில், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், ஹர்பிரீத் ப்ரர், ரிலே மெரிடித், முகமது ஷமி, ரவி பீஷ்னோய், கிறிஸ் ஜோர்டன்.
இதையும் படிங்க: அதிரடி காட்டிய ப்ரித்வி ஷா - டெல்லி அபார வெற்றி!