ETV Bharat / sports

ஐபிஎல் 2021: டெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு - சிஎஸ்கே ப்ளேயிங் லெவன்

இன்றைய ஐபிஎல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் 2021: டெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு

author img

By

Published : Apr 10, 2021, 9:39 PM IST

ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டூ பிளேசிஸ் ரன் ஏதும் எடுக்காமலும், ருத்ராஜ் 5(8) ரன்களிலும் வெளியேறினர். அதன்பின் மொயின் அலி 36 (24) ரன்களும், ராயுடு 23 (16) ரன்களும், சுரேஷ் ரெய்னா 54 (36) ரன்களும் எடுத்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி 'டக் அவுட்' ஆகி ஏமாற்றமளித்தார். இறுதி நேரத்தில் சாம் கரன், ஜடேஜா இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது

இதனால், 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்துள்ளது. சென்னை அணியில் ஜடேஜா 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.