மும்பை: மகளிருக்கான பிரீமியர் லீக் டி20 போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளன. இந்த தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரப் பிரதேச வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் நடந்துவருகிறது.
இந்த ஏலத்தில் 1,525 வீராங்கனைகள் பதிவுசெய்த நிலையில், 246 இந்திய வீராங்கனைகளும், 163 வெளிநாட்டு வீராங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டு ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 12 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்ய வேண்டும். அதேபோல 5 அணிகளும் அதிகபட்சமாக 90 வீராங்கனைகளை மட்டும் தேர்வு செய்ய முடியும். ஒவ்வொரு அணியும் 6 வெளிநாட்டு வீராங்கனைகளை தேர்வுசெய்து கொள்ளலாம் என்று பிசிசிஐ தெரிவித்தது.
அதனடிப்படையில் ஏலம் தொடங்கிய நிலையில், இந்திய நட்சத்திர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு அணிக்கும், ஹர்மன்பிரீத் கவுர் ரூ.1.8 கோடிக்கு மும்பை அணிக்கும், தீப்தி ஷர்மா ரூ.2.6 கோடிக்கு உத்தரப்பிரதேச அணிக்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரூ. 2.2 கோடிக்கு டெல்லி அணிக்கும், ஷஃபாலி வர்மா ரூ.2 கோடிக்கு டெல்லி அணிக்கும், பூஜா வஸ்த்ரகர் 1.9 கோடிக்கு மும்பை அணிக்கும், யாஸ்திகா பாட்டியா ரூ.1.5 கோடிக்கு மும்பை அணிக்கும் அதிகமான விலைக்கு வாங்கப்பட்டனர். அதேபோல ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் ரூ. 3.2 கோடிக்கு குஜராத் அணிக்கும், இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர் ரூ. 3.2 கோடிக்கு மும்பை அணிக்கும் வாங்கப்பட்டனர்.
இதையும் படிங்க: 'டென்னிஸ் வீரர்கள் முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்' - டென்னிஸ் ஜாம்பவான் அட்வைஸ்