முழங்கை தசையில் சிறிய பிளவு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் நியூசிலாந்து அணி கேப்டனும், சன் ரைசர்ஸ் அணியின் முக்கிய வீரருமான கேன் வில்லியம்சன், இன்னும் ஒரு வாரத்துக்குள் குணமடைந்து விடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சன் ரைசரஸ் அணியின் முக்கிய வீரராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் அணியின் தூண் போல் நின்று விளையாடக்கூடியவர் வில்லயம்சன். முதல் இரண்டு போட்டிகளில் இவர் அணியில் இடம்பெறாத நிலையில், மிடில் ஆர்டரில் தவித்து வந்த சன் ரைசர்ஸ் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்த வில்லியம்சனின் வருகை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையடுத்து சன் ரைசரஸ் அணி வில்லியம்சன் பேசிய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ”வலி குறைந்து காயம் விரைவில் குணமாக வேண்டும் என்பதில் கவனமாக உள்ளேன். ஒரு வாரத்துக்குள் முற்றிலும் குணமடைந்து அணிக்குத் திரும்புவேன் என நம்புகிறேன்.
பயிற்சியும் புத்துணர்ச்சியும் சமநிலையில் பெற்று வருகிறேன். உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் உடல் தகுதியுடன் களமிறங்குவேன்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, காயம் காரணமாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் தொடரில் வில்லியம்சன் பங்கேற்கவில்லை. தொடர்ந்து தற்போது ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை மிஸ் செய்துள்ள அவர், விரைவில் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன் ரைசரஸ் அணி தனது அடுத்த போட்டியில் மும்பை இந்தியனஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஏப். 17) நடைபெறுகிறது.
இதையும் படிங்க: SRH vs KKR IPL 2021; 10 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தோல்வி!