ETV Bharat / sports

CSK vs KKR: ஈடன் கார்டனில் தோனி படை: கொல்கத்தா அணி பதுங்குமா, பாயுமா? - சென்னை கொல்கத்தா மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடக்கத்தில் தடுமாறினாலும், கேப்டன் தோனியின் வழிநடத்தலால் சிஎஸ்கே அணி எழுச்சி பெற்றுள்ளது. மஞ்சள் படையைச் சமாளிக்குமா கொல்கத்தா அணி? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

Today IPL
இன்றைய ஐபிஎல்
author img

By

Published : Apr 23, 2023, 2:54 PM IST

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்ரல் 23) மோதுகின்றன. நடப்பு சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. சென்னை அணியைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாட், கான்வே நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ரஹானே 9 ரன்களில் வெளியேறினாலும், அவர் ஃபார்முக்கு திரும்புவார் என நம்பலாம். மொயீன் அலி, ஷிவம் துபே அவர்களது பங்களிப்பை அளிக்கின்றனர். கேப்டன் தோனி அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். குறிப்பாக, பந்துவீச்சாளர்களுக்கு அவர் கொடுக்கும் அட்வைஸ் மெச்சத்தக்கது.

ஒவ்வொரு ஆட்டத்திலும் தோனி களம் இறங்கி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில், 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஆகாஷ் சிங், துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா, மொயீன் அலி ஆகியோர் முழுத்திறனை வெளிப்படுத்தினால் கொல்கத்தா அணிக்கு நெருக்கடி தரலாம். தோனியின் செல்லப்பிள்ளையாக பார்க்கப்படும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பதிரானாவும் நம்பிக்கை தருகிறார்.

பென்ஸ்டோக்ஸ் இல்லை: காயத்தில் இருந்து இன்னும் மீளாத இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் இன்றைய ஆட்டத்திலும் பங்கேற்க மாட்டார். இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் கூறுகையில், "காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத பென்ஸ்டோக்ஸ் இன்னும் சில நாட்கள் ஓய்வில் இருப்பார்" எனக் கூறியுள்ளார். சிசான்டா மகலா, தீபக் சாஹர் ஆகியோரும் இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பில்லை.

கொல்கத்தாவின் பலவீனம் என்ன?: கொல்கத்தா அணி சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று 8வது இடத்தில் உள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நம்பிக்கை தருகிறார். ஆனால் மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறுகின்றனர். அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயர், டெல்லி அணிக்கு எதிராக கடந்த ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ராணா, ரிங்கு சிங், மந்தீப், நரேன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பந்துவீச்சாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களிலும், வேகப்பந்து வீச்சாளர்கள் 9 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளனர். அனுபவ வீரரான உமேஷ் யாதவிடம் எதிர்பார்த்த ஆட்டம் இல்லை. கடந்த ஆட்டத்தில் களம் இறக்கப்படாத ஷர்துல் தாகூர் இந்தப் போட்டியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்த அணியும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தால் மட்டுமே சிஎஸ்கே அணியை சமாளிக்க முடியும்.

ஆட்டம் எங்கே?: சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் இரவு 7.30 மணிக்கு, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

நேருக்கு நேர்: ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 26 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் சென்னை அணி 17, கொல்கத்தா 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

சென்னை உத்தேச அணி: டேவிட் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மதீஷா பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, மகீஷ் தீக்சனா, ஆகாஷ் சிங்.

கொல்கத்தா உத்தேச அணி: ஜேசன் ராய், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), மந்தீப் சிங், ரசெல், ரிங்கு சிங், சுனில் நரேன், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா.

மற்றொரு ஆட்டம்: இந்நிலையில், 32வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி முதலிடத்திலும், பெங்களூரு அணி 6வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.