ETV Bharat / sports

கோப்பையை நோக்கி தோனி அடித்த ஷாட்: Finals'ல் சென்னை 🕺🏽 - ஃபினிசிங்

உத்தப்பா, ருதுராஜ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தாலும், கேப்டன் தோனியின் மிரட்டலான ஃபினிசிங்காலும், டெல்லி அணியை வீழ்த்தி 9ஆவது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.

MSD, DHONI
CSK's 9th Wonder
author img

By

Published : Oct 11, 2021, 8:04 AM IST

துபாய்: ஐபிஎல் 2021 தொடரின் லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றன.

இந்நிலையில், நேற்று (அக். 10) பிளே-ஆஃப் சுற்றின் முதல் குவாலிஃபயர் போட்டியில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

டெல்லி பேட்டிங்

இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 173 ரன்களை சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிருத்வி ஷா 60 ரன்களையும், கேப்டன் ரிஷப் பந்த் 51 ரன்களையும் எடுத்தனர். சென்னை பந்துவீச்சு தரப்பில் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. நோர்க்கியா வீசிய முதல் ஓவரில் டூ பிளேசிஸ் 1 ரன்னில் வெளியேறினார்.

'ராபின்' ஹிட்!

சுரேஷ் ரெய்னாவுக்குப் பதிலாக, கடந்த இரண்டு போட்டியில் விளையாடிய ராபின் உத்தப்பா மூன்றாவது வீரராகக் களமிறங்கினார். இரண்டாவது விக்கெட்டுக்கு ருதுராஜ் - உத்தப்பா ஜோடி 110 ரன்களைக் குவித்தது. குறிப்பாக, உத்தப்பா அடித்த ஷாட்கள் கண்ணுக்குப் பெரும் விருந்தாக இருந்தன. உத்தப்பா 35 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

சீராகப் போய்கொண்டிருந்த சென்னை அணியை டாம் கரன் சற்று தடுமாறவைத்தார். அவர் வீசிய 14ஆவது ஓவரில், உத்தப்பா லாங்-ஆன் திசையில் சிக்சர் அடிக்க முயற்சிக்க, எல்லைக்கோடு அருகே ஸ்ரேயஸ் ஐயர் மிக லாவகமாக கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அவர், 44 பந்துகளைச் சந்தித்து 7 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 63 ரன்களைக் குவித்திருந்தார்.

இதையடுத்து, அதிரடி வீரர் ஷர்துல் தாக்கூர் நான்காவது வீரராக இறக்கப்பட்ட நிலையில், டாம் கரனின் அதே ஓவரில் டக்-அவுட்டாகி வெளியேறினார். ஒருபுறம், சீராக ரன்களை குவித்துவந்த ருதுராஜ் அந்த ஓவரில் சிங்கிள் எடுத்து தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

ருதுராஜ் அவுட்

அடுத்த ஓவரில் ராயுடு 1 (3) ரன்களில் ரன்-அவுட்டாக, சென்னை அணி, 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை எடுத்து சற்று திணறியது. இதனால், கடைசி 5 ஓவர்களில் 52 ரன்கள் தேவைப்பட்டன. ருதுராஜ் - மொயின் அலி ஜோடி 16, 17, 18 ஆகிய மூன்று ஓவர்களில் 28 ரன்களைக் குவித்து மீண்டும் ஆட்டம் சென்னை பக்கம் திரும்பியது.

ஆட்டத்தை முடித்துக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 70 (50) [5 பவுண்டரி; 2 சிக்ஸர்] ரன்களில் 19ஆவது ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

வந்தார்... வென்றார்...

ஏழாவது வீரராக ஜடேஜா இறங்குவாரா இல்லை தோனி வருவாரா என குழப்பம் நீடித்த நிலையில், மிகுந்த நம்பிக்கையுடன் ஆடுகளத்தை நோக்கிவந்தார் தோனி. ருதுராஜ் விக்கெட்டுக்குப் பிறகு ஒரு பவுண்டரி அடித்து, தோனியிடம் மொயின் அலி ஸ்ட்ரைக்கை மாற்றினார். தான் சந்தித்த முதல் பந்தை தோனி தவறவிட்டார்.

இருப்பினும், இரண்டாவது பந்தை சரியாகக் கணித்த தோனி, டீப் மிட்-விக்கெட் திசையில் சிக்சரைப் பறக்கவிட்டார். இதனால், கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட, மொயின் அலி முதல் பந்தில் டாம் கரன் ஆட்டமிழந்தார். இருப்பினும், அடுத்த இரண்டு பந்துகளை பவுண்டரி பறக்கவிட்டு தோனி அதிரடி காட்டினார். இதனால், பதற்றமடைந்த டாம் கரன் நான்காவது பந்தை வைடாக வீச, சென்னை அணிக்கு 3 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டன.

இதையடுத்து, அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து, ஒன்பதாவது முறையாக சென்னை அணியை இறுதிப்போட்டிக்கு தோனி அழைத்துச் சென்றார். கேப்டன் தோனி, ஆறு பந்துகளைச் சந்தித்து ஒரு சிக்சர், மூன்று பவுண்டரிகள் என 18 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே உடன் மல்லுக்கட்டப்போவது யார்?

இதற்கு முன்னர் சென்னை அணி, டெல்லி அணியோடு விளையாடிய கடைசி நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த நிலையில், நேற்றையப் போட்டியில் தோல்வியுற்ற அத்தனை போட்டிகளுக்குச் சேர்த்துவைத்து பதிலடி கொடுத்துவிட்டது.

ஐபிஎல் தொடரின் இன்று (அக். 11) நடைபெறும் பிளே-ஆஃப் எலிமினேட்டர் போட்டியில், பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில், வெற்றிபெறும் அணி வரும் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் டெல்லி அணியோடு மோதும்.

அதில் வெற்றிபெறும் அணி வரும் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில், சென்னை அணியோடு மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நிலக்கரி தட்டுப்பாடு: மின் தடை ஏற்பட அதிக வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.