ETV Bharat / sports

IPL 2021: தீபக சஹாரின் மிரட்டல் பந்துவீச்சு - சிஎஸ்கேவுக்கு 107 இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் - சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப்பின் டாப் ஆர்டரை தனது அற்புத பந்து வீச்சால் தீபக் சஹார் காலி செய்த நிலையில், 107 என்ற எளிதான இலக்கை நோக்கி சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.

deepak chahar
பவுலிங்கில் கலக்கிய தீபக் சஹார்
author img

By

Published : Apr 16, 2021, 9:53 PM IST

மும்பை: சிஎஸ்கேவின் மிரட்டலான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 106 ரன்களை மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 8வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். பஞ்சாப் தொடக்க பேட்ஸ்மேன் மயங்க அகர்வால், தீபக் சஹார் மாயஜால பந்து வீச்சில் ரன் ஏதும் அடிக்காத நிலையில் பெவலியன் திரும்பினர்.

இதன் பின்னர் அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும், கேப்டனுமான கேஎல் ராகுல் ரன் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து கெயில் 10, தீபக் ஹூடா 10, நிக்கோலஸ் பூரன் 0 என அடுத்தடுத்து டாப் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை தீபக் சஹார் வீழ்த்தினார்.

30 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் கிங்ஸ் அணி தவித்து வந்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமுக வீரர் ஷாருக்கான் அணியை சரிவிலிருந்து மீட்டார்.

நிதானமாக விளையாடிய அவர் 47 ரன்கள் எடுத்து சாம் குர்ரான் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே குவித்தது.

சிஎஸ்கே சார்பில் அற்புதமாக பந்து வீசிய தீபக சஹார், 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். மொய்ன் அலி, டுவெய்ன் பிராவோ, சாம் குர்ரான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையும் படிங்க: 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடிய வார்னர் & கோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.