ETV Bharat / sports

We Love You Jadeja: பாச மழை பொழியும் சிஎஸ்கே ரசிகர்கள்; டிவிட்டரில் குவியும் ஆதரவு! - சிஎஸ்கே தோனி ஜடேஜா

தோனியின் பேட்டிங்கை காண்பதற்காக, தான் ஆட்டமிழக்க ரசிகர்கள் விரும்புவதாக சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் சிஎஸ்கே ரசிகர்கள். இவ்விவகாரத்தின் பின்னணி என்ன? விரிவாக பார்ப்போம்.

Jadeja
ஜடேஜா
author img

By

Published : May 12, 2023, 8:50 PM IST

ஹைதராபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2வது இடத்தில் உள்ளதால், அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பிற சீசன்களை காட்டிலும், நடப்பு சீசனில் கேப்டன் தோனியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை சேப்பாக்கம் மைதானம் மட்டுமல்ல... எந்த மைதானத்தில் அவர் களம் இறங்கினாலும், ரசிகர்களின் கரவொலி விண்ணை பிளக்கிறது. பெரும்பாலான போட்டிகளில் செல்போன் டார்ச் வெளிச்சத்தை காட்டி தோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர் ரசிகர்கள்.

டெல்லி அணிக்கு எதிரான கடந்த ஆட்டம் சென்னையில் நடைபெற்ற நிலையில், தோனி களம் இறங்கிய போது 'படையப்பா' படத்தின் பின்னணி இசையை ஒலிபரப்பி, தோனியை ரசிகர்கள் வரவேற்றனர். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் தோனி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அதீத பாசம், சக வீரரின் மனக்குமுறலுக்கு காரணமாகி விட்டது. சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில், "நான் 7வது விக்கெட்டுக்கு களம் இறங்குகிறேன். அப்போது தோனி... தோனி என ரசிகர்கள் குரல் எழுப்புகின்றனர். நான் எப்போது ஆட்டமிழப்பேன் என காத்திருக்கின்றனர்" என சிரித்துக் கொண்டே கூறினார்.

இதுதொடர்பாக டாக்டர் ராஜ்குமார் என்பவர், தனது டிவிட்டரில் சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார். "களத்தில் தனது நிலை குறித்து ஜடேஜா சிரித்துக் கொண்டே பேசினாலும், அதில் மறைந்திருக்கும் வலி அதிகம். உங்கள் அணியின் ரசிகர்களே, உங்களது விக்கெட்டுக்காக காத்திருப்பதை நினைத்துப் பாருங்கள். இது உண்மையிலேயே அதிர்ச்சியானது" என கூறியிருந்தார்.

Jadeja like comment
ஜடேஜா லைக் செய்த பதிவு

இந்த பதிவுக்கு ரவீந்திர ஜடேஜா லைக் கொடுத்தார். தற்போது இந்த விவகாரம் தான் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. சென்னை அணியை விமர்சனம் செய்த பதிவுக்கு, ஜடேஜா லைக் கொடுத்துவிட்டதாக சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். சென்னை அணியில் இருந்து ஜடேஜா விலகுகிறாரா என சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் ஜடேஜாவை சமாதானம் செய்யும் முயற்சியில் சென்னை அணியின் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர். "நாங்கள் தோனி, சிஎஸ்கே அணியை விரும்புகிறோம். அதே நேரம், ஜடேஜாவை உற்சாகப்படுத்தும் செயல் நலிவடைந்து விடவில்லை" என கூறியுள்ளனர்.

CSK Fans Jadeja
ஜடேஜாவுக்கு சென்னை ரசிகர்கள் ஆதரவு

"ஜடேஜாவை ஒருபோதும் நாங்கள் வெறுக்கவில்லை. அவரை விரும்புகிறோம் (WE LOVE YOU JADEJA). உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் அவரும் ஒருவர். தோனியின் பேட்டிங்கை காண நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் ஆட்டமிழக்க வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை ஜடேஜா" என சிலர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Jadeja
ஜடேஜாவுக்கு குவியும் ஆதரவு

"அடுத்த முறை நீங்கள் களம் இறங்கும் போது Jaddu... Jaddu என குரல் எழுப்பி உங்களை வரவேற்க தயார்" என சிஎஸ்கே ரசிகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு சீசனில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 113 ரன்கள் மற்றும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.