ETV Bharat / sports

'உள்ளே புலி.. வெளியே எலி' வெற்றிப் பாதைக்கு திரும்புமா பெங்களூரு அணி? - பெங்களூரு லக்னோ அணிகள் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை அணிக்கு எதிராக, சொந்த மண்ணில் ருத்ரதாண்டம் ஆடிய பெங்களூரு அணி, கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் நைட் ரைடர்ஸ் அணியிடம் சரணடைந்தது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிப் பாதைக்கு திரும்புமா ராயல் சேலஞ்சர்ஸ்? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

today IPL
இன்றைய ஐபிஎல்
author img

By

Published : Apr 10, 2023, 3:40 PM IST

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 10) நடைபெறும் 15வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூருவில் மும்பை அணிக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஆனால் கொல்கத்தாவில் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் சொந்த மண்ணில் விளையாடும் பெங்களூரு அணி, வெற்றிப் பாதைக்கு திரும்பும் முயற்சியில் களம் இறங்குகிறது.

நடுவரிசை திணறல்: பேட்டிங்கை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் டு பிளெஸ்ஸி, விராட் கோலி நம்பிக்கை அளிக்கின்றனர். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இந்த ஜோடி இன்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். ஆனால் நடுவரிசை வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறுகின்றனர். மேக்ஸ்வெல், ஹர்ஷல் படேல், சபாஸ் அகமது, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே, லக்னோ அணிக்கு நெருக்கடி தர முடியும். எனவே பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு அணி உள்ளது.

ஹேசில்வுட் மிஸ்ஸிங்: பந்துவீச்சை பொறுத்தவரை கரண் சர்மா, வில்லே ஆகியோர் ஆறுதல் அளிக்கின்றனர். சிராஜ், ஆகாஷ் தீப் முழுத் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். காயம் காரணமாக ரீஸ் டாப்லே தொடரில் இருந்து விலகியது பெங்களூரு அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் பேர்னல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் இன்று களம் இறக்கப்படுவாரா என்பது சந்தேகம் தான்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை முடித்துக் கொண்டு பெங்களூரு அணியில் இலங்கை வீரர் ஹசரங்கா இன்று இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இன்றைய ஆட்டத்தின் ஆடும் லெவனில் அவர் இடம்பெறுவது சிரமம் தான். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் ஏப்ரல் 17ம் தேதி சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தான், களம் இறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.

மிரட்டும் மேயர்ஸ்: லக்னோ அணியை பொறுத்தவரை கேப்டன் கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ், குயின்டான் டி காக் அதிரடியாக விளையாடிக் கூடியவர்கள். கடந்த 3 ஆட்டங்களில் கைல் மேயர்ஸ் 139 ரன்கள் அடித்துள்ளார். நடுவரிசை ஆட்டக்காரர்கள் நிகோலஸ் பூரன், தீப் ஹூடா ஆகியோர் கணிசமான ரன்களை குவித்தால், பெங்களூரு அணிக்கு எதிராக நல்ல ஸ்கோரை எட்ட முடியும். கடைசியாக சன்ரைசர்ஸ் அணியுடன் மோதிய லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல், குருணல் பாண்ட்யா வெற்றிக்கு வழிவகுத்தனர்.

ரவி பீஷ்னோய், குருணல் பாண்ட்யா, அமித் மிஸ்ரா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருவதால், பெங்களூரு பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். ஆவேஷ் கானுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், மார்க்வுட் காய்ச்சல் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. எனவே இன்றைய ஆட்டத்தில் இருவருக்கும் இடம் கிடைக்குமா என்பது, டாஸ் போடப்பட்ட பிறகே தெரியவரும்.

லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலுக்கு பெங்களூரு சொந்த ஊர் என்பதால், அவருக்கும் ரசிகர்களின் ஆதரவு இருக்கும். கடந்த 2 ஆட்டங்களை பார்க்கும் போது, சொந்த மண்ணில் அதிரடியாக விளையாடிய பெங்களூரு அணி, கொல்கத்தாவில் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பியது. எனவே தோல்வியில் இருந்து மீண்டு வர, அந்த அணி கூடுதல் கவனம் செலுத்தும் என்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

நேருக்கு நேர்: ஐபிஎல் தொடரில் இதுவரை பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் இரண்டு முறை மோதியுள்ளன. இரு முறையும் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ஆட்டம் எங்கே?: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டம், இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.

பெங்களூரு உத்தேச அணி: விராட் கோலி, டு பிளெஸ்ஸி (கேப்டன்), சுயாஷ் பிரபுதேசாய், மேக்ஸ்வெல், சபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹசரங்கா/பிரேஸ்வெல், டேவிட் வில்லே, ஹர்ஷல் படேல், கரண் சர்மா, ஆகாஷ் தீப்.

லக்னோ உத்தேச அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், குயின்டான் டி காக் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா, நிகோலஸ் பூரண், அமித் மிஸ்ரா, ஸ்பேர்ஹெட்/மார்க்வுட், யஷ் தாகூர், ரவி பீஷ்னோய், உனத்கட்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.