ETV Bharat / sports

ஐ.பி.எல். கிரிக்கெட்: 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி - ஆட்ட நாயகன் விருது சுப்மான் கில்லுக்கு வழங்கப்பட்டது

லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் அணியாக குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்: 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி

author img

By

Published : May 11, 2022, 8:11 AM IST

மும்பை: மும்பையில் நேற்று (மே 10) நடைபெற்ற 57-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக விருத்திமான் சாகாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர்.

சாகா 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மேத்தீவ் வேட் 10 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 11 ரன்னிலும், டேவிட் மில்லர் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் விளையாடிய சுப்மன் கில் 63 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களம் இறங்கியது. குஜராத் அணியின் அபார பந்துவீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி, 13.5 ஓவரில் 82 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் சார்பில் தீபக் ஹூடா அதிகமாக 27 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

குஜராத் அணி சார்பில் ரஷீத் கான் 4 விக்கெட்டுகளும், யாஷ் தயாள், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது சுப்மான் கில்லுக்கு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2022: 52 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.