மும்பை :மும்பை : பஞ்சாப்-பெங்களூ அணிகள் மோதிய ஆட்டம் நவிமும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ஸ் அகடமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங் அகர்வால், பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் டுபிளசிஸ், அனுஜ் ராவத் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் அதிரடியாக ஆடி பஞ்சாப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதற விட்டனர். இந்த நிலையில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 20 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த ராவத், ராகுல் சாஹர் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.
எனினும் மறுபுறம் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினார் டுபிளசிஸ். அவருடன் ரன்மெஷின் விராத் கோலி ஜோடி சேர்ந்தார்.
இந்த 2 பேரும் பஞ்சாப் பந்து வீச்சை பஞ்சர் ஆக்கினர் என்றே தான் கூற வேண்டும். அதிரடி காட்டிய டுபிளசிஸ் 49 பந்துகளில் 68 ரன்கள் (2 பவுண்டரி, 5 சிக்ஸர்) என களத்தில் நின்றார். மறுபுறம் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 21 பந்துகளில் 32 ரன்களும் விராத் கோலி களத்தில் நின்றார்.
இதனால் 15 ஓவர்களில் பெங்களூரு 143 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 16ஆவது ஓவரில் 13 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் அணியின் ஸ்கோர் 158 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் 17.1 ஓவரில் 88 ரன்கள் எடுத்திருந்த டுபிளசிஸ் அவுட் ஆனார். அப்போது பெங்களூரு 168 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மறுமுனையில் கோலி நிலைத்து நின்று ஆடினார். அணியின் ஸ்கோர் 19 ஓவரில் 189 ஆக உள்ளது. விராத் 40 ரன்கள் எடுத்துள்ளார்.