மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (மே.19) நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்டியா 62 ரன்னும், டேவிட் மில்லர் 34 ரன்னும், விரித்திமான் சஹா 31 ரன்னும் எடுத்தனர்.
பெங்களூரு சார்பில் ஹேசிவுட் 2 விக்கெட், மேக்ஸ்வெல், ஹசாரங்கா தலா ஒரு விக்கெட்டு எடுத்தனர். 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூ பிளசிஸ் இருவரும் அதிரடியாக ஆடினர். விராட் கோலி அரை சதமடித்தார்.
டூ பிளசிஸ் 44 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து 73 ரன்களில் விராட் கோலி ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 18 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், பெங்களூரு அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றை பெங்களூரு அணி தக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: த்ரில் வெற்றி பெற்று லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி