மும்பை: இன்று (மார்ச் 27) மாலை நடைபெற்ற ஐபிஎல்., 2022இல் இரண்டாவது ஆட்டமான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி, மும்பை பார்போன் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த மும்பை அணி, 177 (20) ரன்களை குவித்து 5 விக்கெட்களை இழந்தது.
மும்பையில் அதிகபட்சமாக இஷாந்த் கிஷன் 81 (48) ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 18.2 ஓவர்களில் 179/6 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக லலித் யாதவ் 48*(38) ரன்கள் குவித்து தன் அணியை வெற்றி பெற செய்து ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.