ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை எடுத்தது.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி, எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தடு. இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டிக்கு நடுவில், இரண்டாவது இன்னிங்ஸின் போது தனது முதல் ஓவரை வீசிய டெல்லி அணியின் அஸ்வின், பெங்களூரு பேட்ஸ்மேனுக்கு மான்கட் வார்னிங் வழங்கினார். இது ஆட்டத்தின் போது சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. இதைக்கண்ட டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் சிரிப்பை அடக்க முடியால் தவித்திருந்தார்.
-
ICYMI - Ashwin warns Finch.
— IndianPremierLeague (@IPL) October 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
No, not this time. R Ashwin gives Aaron Finch a warning at the non-striker's end.https://t.co/50haslDf0v #Dream11IPL #RCBvDC
">ICYMI - Ashwin warns Finch.
— IndianPremierLeague (@IPL) October 5, 2020
No, not this time. R Ashwin gives Aaron Finch a warning at the non-striker's end.https://t.co/50haslDf0v #Dream11IPL #RCBvDCICYMI - Ashwin warns Finch.
— IndianPremierLeague (@IPL) October 5, 2020
No, not this time. R Ashwin gives Aaron Finch a warning at the non-striker's end.https://t.co/50haslDf0v #Dream11IPL #RCBvDC
காரணம் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக மான்கட் குறித்த சர்ச்சை சர்வதேச கிரிக்கெட்டில் பூதாகரமாக வெடித்தது. மேலும் ஆஸ்திரெலிய அணியின் முன்னால் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் தனது பங்கிற்கு கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
-
'First and final warning for 2020' 😂@ashwinravi99 | #Dream11IPL pic.twitter.com/Bq1B0rsXWM
— IndianPremierLeague (@IPL) October 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">'First and final warning for 2020' 😂@ashwinravi99 | #Dream11IPL pic.twitter.com/Bq1B0rsXWM
— IndianPremierLeague (@IPL) October 5, 2020'First and final warning for 2020' 😂@ashwinravi99 | #Dream11IPL pic.twitter.com/Bq1B0rsXWM
— IndianPremierLeague (@IPL) October 5, 2020
ஆனால் நேற்றைய போட்டியின் போது அஸ்வின், பிஞ்சின் விக்கெட்டை வீழ்தாமல் வார்னிங்கை மட்டுமே கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஐபிஎல் சீசனின் போது ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லரின் விக்கெட்டை ரவிசந்திரன் அஸ்வின் மான்கட் முறையில் வீழ்த்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க:பிரஞ்சு ஓபன்: காலிறுதியில் மோதும் ஜோகோவிச் - கரேனோ புஸ்டா!